PM Kisan பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு, மானிய விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல், கருப்பட்டி விலை கடும் உயர்வு, திருவாரூர், தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழு ஆய்வு, விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஏரிஸ் அக்ரோ நிறுவனம் திட்டம், தமிழகத்தில் ஆவின் நெய், வெண்ணை தட்டுப்பாடு, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 'தினை கேன்டீன்' அறிமுகம் முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க:பம்ப்செட் மானியம்|1000 யூனிட் இலவச மின்சாரம்|இறால் மானியம்|ரூ.20 லட்சம் கோடி|பயிர்காப்பீடு
1. PM Kisan பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெறுபவராக இருந்தால் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காமல் போகலாம். பிஎம் கிசான் திட்டத்தால் பயனடையும் விவசாயிகள் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் தங்கள் வங்கிக் கணக்குகளின் e-KYC சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து பிம் கிசான் திட்டத்தின் நோடல் அதிகாரி மேக்ராஜ் சிங் ரத்னு கூறுகையில், KYC அப்டேட்டை மேற்கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார். வரவிருக்கும் தவணைப் பணப் பரிமாற்றத்திற்காக e-KYC அப்டேட்டில் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும். பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்காவிட்டால் சிரமம் ஏற்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: TNEB: 1000 யூனிட் இலவச மின்சாரம்|சுய தொழில் பென்சன்|டெல்டா பகுதி மழை|மீன் வளத் துறை|தினை உணவு
2. மானிய விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல்!
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வரும் தேங்காயை பறித்து உலர வைத்து கொப்பரை தேங்காயாக விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதனால் அரசு சார்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கடூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் விவசாயிகளிடம் இருந்து மானிய விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஒரு குவிண்டால் கொப்பரை தேங்காய் ரூ.11,750-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
3. கருப்பட்டி விலை கடும் உயர்வு!
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது இதன் காரணமாக கருப்பட்டி விலை கடும் உச்சத்தை தொட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை வட்டாரம், தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, சாத்தான்குளம், விளாத்திகுளம் வட்டாரத்தில் கருப்பட்டி அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உடன்குடியில் தயாரிக்கப்படும் கருப்பட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த 10 தினங்களாக கருப்பட்டியின் விலை ஏற தொடங்கியுள்ளது. கிலோ ரூ.280க்கு விற்ற புது கருப்பட்டி தற்போது ரூ.310 முதல் ரூ.330 வரை விற்கப்பட்டு வருகிறது. பழைய கருப்பட்டிகள் முன்பு ரூ.350க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை ரூ.400ஐ தொட்டு கொண்டுள்ளது.
மேலும் படிக்க: விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி|தண்ணீர் பாய்ச்ச செயலி|பயிர் காப்பீடு|முத்ரா கடன்|புயல் எச்சரிக்கை
4. திருவாரூர், தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழு ஆய்வு!
பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பல ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவித்தார். டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நேற்று மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பின்னர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தையும் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
5. விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஏரிஸ் அக்ரோ நிறுவனம் திட்டம்!
மும்பையைச் சேர்ந்த ஏரிஸ் அக்ரோ லிமிடெட், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் சிறப்பு உரங்களின் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர், உரங்கள் தெளிப்பதற்கும், மண் ஸ்கேனிங் சாதனங்களுக்கும் ட்ரோன்களை வழங்கப் போவதாகக் கூறியுள்ளது. இந்த ட்ரோன்கள் அடுத்த சில மாதங்களில் ரூ. 8 - 10 லட்சம் விலையில் வாங்குவதற்கு கிடைக்கும் என்றும், அதே நேரத்தில் விவசாயிகள் அதன் சேவையை ஏக்கருக்கு ரூ. 500 - 600 வரை வாடகைக்கு பெறலாம் என்றும் கூறியுள்ளது. மேலும், மண் ஸ்கேனிங் கருவியை விவசாயிகள் ஒரு சோதனைக்கு 50-100 ரூபாய் விலையில் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
6. தமிழகத்தில் ஆவின் நெய், வெண்ணை தட்டுப்பாடு
ஆவின் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஆவின் பால் கொள்முதல் குறைந்துவருவதால் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆவின் 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630 லிருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340 லிருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தி இருந்தது. டிசம்பர் 16ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது மாதங்களில் மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருந்தது. விலை உயர்வு ஒரு பக்கம் இருப்பினும் நெய், வெண்ணெய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. ஆவின் நிறை கொழுப்பு பால் 12 ருபாய் விலையேற்ற பட்டிருந்த போதிலும் கொள்முதல் விலை உயர்வால் உற்பத்தி செலவில் 2 ருபாய் நஷ்டம் ஏற்படுகிறது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
7. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 'தினை கேன்டீன்' அறிமுகம்!
எய்ம்ஸ் டெல்லியில் 'தினை கேன்டீன்' தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இது மார்ச் 1 ஆம் தேதிக்குள் செயல்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் எம் ஸ்ரீனிவாஸ் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மத்திய உணவு விடுதியின் இரண்டாவது தளத்தில் கேன்டீன் அமைக்கப்படும் என்றும், தினை சார்ந்த உணவுகள் 24×7 வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய தினைகள், சமையல் வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உலகளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காக 2023 ஆம் ஆண்டை மக்கள் இயக்கமாக 'சர்வதேச தினை ஆண்டாக' கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. நாளை வந்தே பாரத்-ஐ தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
மும்பை-புனே-சோலாப்பூர் வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிப்ரவரி 10 ஆம் தேதி மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக பிப்ரவரி 10-ம் தேதி மும்பையில் ட்ரோன்கள், பாராகிளைடர்கள், அனைத்து வகையான பலூன்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல்டு மைக்ரோலைட் விமானங்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது.
9. தமிழகத்திலேயே முதல்முறையாக பெரம்பலூரில் இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை செயல் விளக்கம்
தமிழகத்தில் முதல்முறையாக, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நவீன இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை செய்யும் செயல்விளக்கம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற நவீன கருவிகளுடன் கூடிய பருத்தி அறுவடை இயந்திரத்தின் செயல்பாட்டை எம்எல்ஏ ம.பிரபாகரன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை குறித்து விவசாயிகளுக்கு பருத்தி வயலில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
10. தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகு உரிமையாளர்கள் 10 சதவீதத்துக்கும் அதிகமாக பணம் வசூலிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு வேலை நிறுத்தத்தால் 240 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
11. ஓசூர் அருகே கால்நடை பண்ணையில் தஞ்சமடைந்த காட்டு யானைகள்
ஓசூர் அருகே கர்னூர் ஏரியில் இருந்த யானைகள் மீண்டும் கால்நடை பண்ணையில் தஞ்சம் அடைந்துள்ளது. காட்டு யானைகள் அரசு கால்நடை பண்ணையில் மீண்டும் தஞ்சமடைந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் படிக்க
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: மாதம் ரூ.20,000 வரை கிடைக்கும்!
Share your comments