பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) நிதிப் பலன்களின் 10வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று ரூ.20,000 கோடி வங்கி கணக்கில் சேலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 10 கோடி விவசாய குடும்பங்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
PM-KISAN திட்டத்தின் கீழ் நிதி வழங்கும் தேதியில் மாற்றங்கள் நிறைய நடந்த நிலையில், தற்போது இந்த செய்தி வெளியாகி உள்ளது.
பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுடைய விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் வழங்கப்படுகிறது, தலா ரூ.2000 வீதம் மூன்று தவனையாக, 4-மாத இடைவெளியில் செலுத்தப்படுகிறது. இந்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வந்து சேரும் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், முன்பே, இந்த வருடத்திற்கான இரண்டு தவனைகளும், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. எனவே மக்கள் அவர்களது அடுத்த தவனை, அதாவது இத் திட்டம் ஆரம்பம் முதல் கணகிட்டால், இது 10வது தவனை, இந்த தவனைக்காக காத்திருந்தனர். தற்போது, இதற்கான தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை 1.6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சம்மன் நிதி விவசாயி குடும்பங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, சுமார் 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPOs) 14 கோடி ரூபாய்க்கும் அதிகமான பங்கு மானியத்தை பிரதமர் வெளியிடுவார் , இதன் மூலம் 1.24 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
மேலும், எஃப்.பி.ஓக்களுடனும், நாட்டு மக்களிடமும், பிரதமர் உரையாற்றுவார். இந்நிகழ்ச்சியில் மத்திய விவசாய அமைச்சரும் பங்கேற்பார்.
மேலும் படிக்க:
Share your comments