தமிழகம் முழுவதும் வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வருகின்ற 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல மாவட்டங்களில், வாழையில் பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவை, இயற்கை சீற்றங்களால், பாதிக்கப்படும்போது, வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.
அவ்வாறு நஷ்டமையும்போது, நிதிச்சுமையை எதிர்கொள்ளும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை (Pradhan Mantri Fasal Bima Yojana PMFBY) செயல்படுத்தி வருகிறது.
எனவே, வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளை, காப்பீடு செய்ய வைக்கும் பணிகளில், தோட்டக்கலை துறையினர் கவனம் செலுத்துகின்றனர்.
வாழை சாகுபடி தீவிரம்
தற்போது, பல்வேறு மாவட்டங்களில், வாழை சாகுபடி துவங்கியுள்ளது. இவ்வாறு, வாழை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, ரூ.3,211 கட்டணம் செலுத்தி, வருகின்ற 31ம் தேதிக்குள், பயிர் காப்பீடு செய்ய, கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
பயிர் கடன் பெற்ற விவசாயிகள், வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள், அரசின் பொது சேவை மையங்களிலும், ஆன்லைன் வாயிலாகவும் பிரீமியம் தொகையைச் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காப்பீடு செய்வதால், குறைந்தபட்சம் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க...
உங்கள் பயிருக்கு பாதுகாப்பு அரண் எது தெரியுமா?- விபரம் உள்ளே!
Share your comments