பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை ரூ.101875 கோடி விவசாயிகள் உரிமை கோரியுள்ளனர். விவசாயிகள் எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும், அதில் சேர கடைசி தேதி போன்ற தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
பருவமழை, புயல், கனமழை, வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் விவசாயிகள் பயிர்களை இழக்கும் அபாயக் காரணியைக் குறைக்க பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்படுவதால், பல விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளால் (PMFBY) Fasal Bima திட்டத்தின் கீழ் பிரீமியமாக செலுத்தப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், 475 ரூபாய் உரிமைகோரலாகப் பெற்றதாகக் கூறினார்.
இந்த திட்டம் ஜனவரி 13, 2016 அன்று தொடங்கப்பட்டதாகும். இந்தத் திட்டத்தில் விவசாயிகள் மிகக் குறைந்த பிரீமியத்தை செலுத்த வேண்டும் என்று தோமர் தெரிவித்தார். இதுவரை விவசாயிகள் தங்களின் பிரிமியம் பங்காக ரூ.21,450 கோடி செலுத்தியுள்ளனர். அதற்கு ஈடாக அவர்களுக்கு ரூ.101875 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் செலுத்தப்பட்டுள்ளன.
பிரீமியம் எவ்வளவு பற்றிய தகவல்
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவில், விவசாயிகள் காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சமாக 2 சதவீதத்தை காரீஃப் உணவு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்காக செலுத்த வேண்டும் மற்றும் 1.5 சதவீதத்தை ரபி உணவு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு செலுத்த வேண்டும். அதேசமயம் வணிக மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு மொத்த பிரீமியத்தில் அதிகபட்சமாக 5 சதவீதம் செலுத்தினால் போதும்.
மீதமுள்ள பிரிமியம் (மானியம்) வடகிழக்கு மாநிலங்களைத் தவிர, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளால் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. காரீஃப் 2020 சீசனில் ஒன்றிய அரசு மற்றும் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களுக்கு இடையேயான பிரீமியம் மானியத்தின் பங்கு 50:50 லிருந்து 90:10 ஆக மாற்றப்பட்டது. அதாவது, மாநில அரசு 10 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும். மீதமுள்ள 90 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. குறு நில விவசாயிகளின் பங்குக்கான பிரீமியத்தை தானாக செலுத்தவும் ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. நடுத்தர விவசாயிகளிடமிருந்து அவர்களின் பங்கின் பாதி பிரீமியம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
காப்பீட்டு திட்டத்தில் சேர கடைசி தேதி எப்போது? அறிந்துக்கொள்ளுங்கள்.
ரபி பருவப் பயிர்களுக்கு, 31 டிசம்பர் 2021க்கு முன் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துவிடலாம். திட்டம் தன்னார்வமாக செய்யப்பட்டுள்ளது. அதாவது, கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளின் பணத்தில் இருந்து இன்சூரன்ஸ் பிரீமியத்தை, இனி காப்பீட்டு நிறுவனங்கள் வலுக்கட்டாயமாகப் பிடித்தம் செய்ய முடியாது. எனவே, உங்களிடம் KCC இருந்தால், உங்களுக்கு பயிர்க் காப்பீடு தேவையில்லை என்றால், இந்த விஷயத்தை வங்கிக்கு விரைவில் எழுத்துபூர்வமாக தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க:
பயிர்க் காப்பீட்டுத் தொகையைச் செலுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள்!
Share your comments