1. விவசாய தகவல்கள்

PMFBY திட்டம்: உடனே குறுவை பயிருக்கு காப்பீடு செய்யுங்க

Deiva Bindhiya
Deiva Bindhiya
PMFBY Scheme: Call for Crop Insurance - Ariyalur

PMFBY திட்டம் பயிர் இழப்புக்கு எதிராக விரிவான காப்பீட்டுத் தொகையை வழங்கும் திட்டமாகும். இதனால் விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்த உதவுகிறது. இத்திட்டம் அனைத்து உணவு மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் மற்றும் வருடம் முழுவதுக்குமான காப்பீடு திட்டமாகும். இதனால் மாவட்ட ஆட்சியர் விரைந்து பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) அரியலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் ராபி பருவம் 2022-23ல் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் பாதிப்பகளிலிருந்து வாழ்வாதாரத்தினையும், பொருளாதார இழப்பினையும் பாதுகாக்க E-காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிர் காப்பீடு செய்வதற்கு, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC தகவல்களுடன் கூடிய பாஸ்புக் முதல் பக்கம் நகல், நடப்பு பயிர் சாகுபடி அடங்கல், முன் மொழிவுப் படிவம் ஆகியவற்றை கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு கட்டணம் செலுத்தலாம்.

பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனத்தில் பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.885 பிரிமியம் செலுத்திட கடைசி நாள்: 28.02.2023 செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து கால நிலை மாற்றங்களால் ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்க வேண்டும்.

மேலும் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலர்கள் திரு.த.சிவகுமார், துணை தோட்டக்கலை அலுவலர், அரியலூர்-9943841155 செல்வி.அ.சந்தியா, தோட்டக்கலை அலுவலர், திருமானூர் 8760531338, தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, அவர்கள் தெரிவித்துள்ளார்.

(குறிப்பு: இச்செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர் வாயிலாக வெளியான் செய்தியாகும்.)

மேலும் படிக்க:

PMFBY: ராபி பருவம் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிப்பு

PMFBY திட்டம்: குறித்த கேள்விகளுக்கு வீடு வீடாகச் சென்று பதிலளிக்கும் அரசு

English Summary: PMFBY Scheme: Call for Crop Insurance - Ariyalur Published on: 14 November 2022, 01:42 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.