1. விவசாய தகவல்கள்

PMFBY திட்டம்: குறித்த கேள்விகளுக்கு வீடு வீடாகச் சென்று பதிலளிக்கும் அரசு

Deiva Bindhiya
Deiva Bindhiya
PMFBY Scheme: Government that goes door-to-door to answer questions

விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுக் கொள்கையைப் பற்றி நிறைய கேள்விகள், சந்தேகங்கள் இருந்து வருகிறது. இந்த கேள்விகளுக்கான விடை தெரியாமல் இருப்பதால், அவர்களால் இந்த திட்டத்தில் முழுமையான பயனை அடைய முடிவதில்லை எனவே இதற்காகவே வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய அரசு முடிவை மேற்கொண்டுள்ளது.

விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுக் கொள்கையை வழங்குவதற்காக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் தொடங்கவுள்ளதாக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. வரவிருக்கும் காரீஃப் பருவத்தில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) செயல்படுத்தப்பட்ட ஏழாவது ஆண்டிற்குள் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் அரசின் கொள்கைகள், நிலப் பதிவுகள், உரிமைகோரல் செயல்முறை மற்றும் PMFBY-ன் கீழ் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதை உறுதி செய்வதே, 'மேரி பாலிசி மேரே ஹாத்' என்ற, பிரச்சாரத்தின் நோக்கமாகும் என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் முதல் தொடங்கும் காரீஃப் பருவத்தில், திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து மாநிலங்களிலும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. PMFBY, பிப்ரவரி 2016 இல் தொடங்கப்பட்ட திட்டமாகும், இது இயற்கை பேரிடர்களால் பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

85% சிறு மற்றும் குறு விவசாயிகள் திட்டத்தில் சேர்ந்துள்ளனர் (85% of small and marginal farmers are enrolled in the scheme)

அமைச்சகத்தின் கூற்றுப்படி, PMFBY இன் கீழ் 36 கோடி விவசாயிகளின் விண்ணப்பங்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள், இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,07,059 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளில் சுமார் 85 சதவீதம் பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் என்பதால், பயிர் காப்பீட்டுத் திட்டம் மிகவும் நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா 2020 ஆம் ஆண்டில் விவசாயிகளின் தன்னார்வ பங்கேற்பின் அடிப்படையில் மாற்றப்பட்டது. பயிர் இழப்பு ஏற்பட்டால் 72 மணி நேரத்திற்குள் பயிர் காப்பீட்டு செயலி, CSC மையம் அல்லது அருகில் உள்ள வேளாண் அலுவலர் மூலம் விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு முறையில் கோரிக்கையை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2022-23 பட்ஜெட்:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் பயிர்க் காப்பீட்டிற்கு ட்ரோன்களைப் பயன்படுத்த முன்மொழிந்துள்ளார். இது தரையில் திட்டத்தை சீராக செயல்படுத்த தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க:

தமிழகம்: அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு! வானிலை அறிக்கை

Biofortified Crops என்றால் என்ன? இதன் பயன்கள் என்ன?

English Summary: PMFBY Scheme: Government that goes door-to-door to answer questions Published on: 19 February 2022, 12:19 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.