புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-
சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் போன்ற நுண்ணீர்ப் பாசன அமைப்புகளை உருவாக்க சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் அளிக்கப்பட்டு வருகிறது.
-
இத்திட்டத்தின் கீழ், நுண்ணீ ர்ப் பாசன முறைக் க வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாமல், குழாய் கிணறு துளைக் கிணறு அமைக்கவும் நீரை இறைப்பதற்கு ஆயில் இன்ஜின், மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், மானியம் வழங்கப்படுகிறது.
-
இதேபோல பாசன நீரை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கும் மானியம் பெறலாம்.
-
மேலும், விவரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகிக் கூடுதல் தகவல்கள் பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments