1. விவசாய தகவல்கள்

கொளுத்த லாபம் தரும் வேளாண் தொழில்கள்- விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

உடலுக்கு உணவு அவசியம். உணவுக்கு சாகுபடி அவசியம். அதனால்தான் உணவின்றி உயிர் இல்லை என்கிறார்கள்.

அத்தகைய உணவை உற்பத்தி செய்யும் விவசாயத்தில், நெல், காய்கறி, சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்வது மட்டுமே விவசாயம் அல்ல. இதைத்தவிர நிறைந்த லாபம் ஈட்ட வழிவகுக்கும் வேளாண்களும் உள்ளன. அவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு, கடின உழைப்பை போட்டால், நிச்சயம் வெற்றி பெற முடியும்.

அந்த தொழில்களின் பட்டியல் இதோ!

பிராய்லர் சிக்கன் (Broiler Chicken)

கிராமப்புறங்களைக் காட்டிலும் நகரவாசிகளின் விருப்பமான அசைவு உணவு எதுவென்றால், அது பிராய்லர் சிக்கன்தான். எனவே அவர்களது இந்த விருப்பத்தை நம்மால் எளிதில் காசாக மாற்றிக்கொள்ள முடியும்.

கோழிப்பண்ணை அமைக்க முன்வரும்போது, குறிப்பாக பிராய்லர் கோழிகளை வளர்ப்பது சாமர்த்தியமானது. ஏனெனில் இவை இரண்டு மாதங்களிலேயே நன்கு வளர்ந்துவிடும். இவற்றை வளர்ப்பதற்கு அதிகளவில் இடமும் தேவையில்லை என்பது இந்தத் தொழிலின் சிறப்பு அம்சம். எனவே சில மாதங்களிலேயே நல்ல வருமானமும் கிடைக்கும்.

பூக்கள் சாகுபடி (Flowers Farming)

குறைந்த முதலீட்டில், சிறிய இடத்தில், பூக்களை சாகுபடி செய்ய முடியும். கொஞ்சம் அதிக கவனம் செலுத்தி, அவற்றை கவனித்துக்கொண்டால் மட்டுமே போதும், நிறைந்த லாபத்தை ஈட்ட முடியும். அதிலும் குறிப்பாக சூரியகாந்திப்பூ, வாடாமல்லி, டேலியா, சாமந்தி போன்றவை சிறந்த தேர்வாக இருக்கும். தகுந்த இடம், சரியான நீர்பாசன வசதி, சூரியஒளி கிடைக்கும் வசதி, கூடுதல் கவனம் இருந்தால் போதும் அதிகளவில் பூக்களை சாகுபடி செய்ய முடியும்.

சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..! 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் வேண்டுமா? இதோ உங்களுக்கான சிறந்த ஐடியாக்கள்!!

தேனீ வளர்ப்பு (Bee Farming)

பெரிய அளவிலான இடமும், அதிக நேரம் செலவிடும் வசதியும் இருந்தால், இந்தத் தொழில் கொளுத்த லாபம் தரும். ஏனெனில், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் தேனுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். உடனடியாகவே விற்றும்போகும். சுத்தமானத் தேனை தயாரித்து சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்தால் அதிகபட்ச லாபம் ஈட்டலாம். அதில் மதிப்புக்கூட்டுப் பொருட்களையும் உருவாக்கி விற்பனை செய்தால், வாடிக்கையாளர்கள் ஈக்களைப் போல் உங்களையும் மொய்க்கத் தொடங்கிவிடுவர்.

ஆஸ்டர் காளான் (Oyster Mushroom)

காளான் உடலுக்கு நல்லது என்ற விழிப்புணர்வு தற்போது மக்களிடையே அதிகளவில் ஏற்பட்டிருப்பதால், சமீபகாலமாக காளானுக்கு மிகப்பெரிய மவுசு உருவாகியுள்ளது. வீடுகளில் சமைப்பதைக்காட்டிலும், ஓட்டல்கள், மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் காளானில் தயாரிக்கப்படும் உணவுகள் அதிகளவில் விற்றுத்தீர்ந்துவிடுகிறது. எனவே காளானை வளர்த்து, ஓட்டல்களில் ஒட்டுமொத்த ஆர்டர்களைப்(Order) பெற்று விற்றுவிடலாம். 

வேளாண் துறையில் நல்ல லாபம் ஈட்ட வேண்டுமா? இதோ உங்களுக்கான சுய தொழில் வாய்ப்புகள்! 

ஆடு மாடு வளர்ப்பு Goat, Sheep & Dairy Farming)

 குறைந்த முதலீட்டில் கால்நடை பண்ணை வைக்கலாம். அதிலும் பால்பொருட்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய அளவில் சந்தை தேவை இருப்பதால், அதனைப் பயன்படுத்திக்கொண்டு நல்ல லாபம் ஈட்ட முடியும்.

கீரை வளர்ப்பு

குறைந்த இடம் இருந்தால் போதும். பல வகையிலான கீரைகளை நம்மால் வளர்க்க முடியும். உடலுக்கு பல்வேறு சத்துக்களை சளைக்காமல் தருவதில் கீரைகள் மிகவும் முக்கியமானவை. எனவே கீரை வளர்ப்பைப் பக்குவமாகக் கையாண்டு கவர்ச்சிகமான லாபத்தைப் பெறலாம்.

வேளாண் துறையில் அதிக லாபம் பெற உதவும் சிறு தொழில்கள்!

English Summary: Profitable agro-industries - details inside! Published on: 10 December 2020, 11:07 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.