5000 விவசாயிகளுக்கு பம்புசெட் மானியம், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000, உலகப் பயிறு தினம் இன்று கொண்டாட்டம், தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் எப்போது குறையும்? வானிலை ஆய்வு மையம் தகவல், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சிறுதானியங்கள்: நடிகர் கார்த்தி வேண்டுகோள், ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் தரும் பயிர் சாகுபடி, உச்சம் தொட்ட கோதுமை விலை, தக்காளி மகசூல் குறைவு! விவசாயிகள் கவலை, தங்கம் விலை வீழ்ச்சி! இன்றைய விலை நிலவரம் முதலான வேளாண் தகவல்க்ளை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: பம்ப்செட் மானியம்|1000 யூனிட் இலவச மின்சாரம்|இறால் மானியம்|ரூ.20 லட்சம் கோடி|பயிர்காப்பீடு
1. 5000 விவசாயிகளுக்கு பம்புசெட் மானியம்!
உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு. தமிழ்நாடு அரசு கடந்த இரு ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறது. ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் பொருத்தவும் ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000/- வீதம் 5,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறு, குறு. ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டத்தின் தொடர்ச்சியாகத் தற்பொழுது தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
2. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000!
பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப்படுகை மாவட்டங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் நீரில் மூழ்கி அழுகியுள்ள பல இலட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு 20 ஆயிரம் மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. எனவே, பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: PM Kisan அப்டேட்|மானியத்தில் கொப்பரை தேங்காய்|கருப்பட்டி விலை|மத்திய குழு ஆய்வு|ட்ரோன் தொழில்நுட்பம்
3. உலகப் பயிறு தினம் இன்று கொண்டாட்டம்!
நாடுமுழுவதும் பிப்ரவர் 10 ஆம் நாளான இன்று உலக பயிறு தினம் கொண்டாடப்படுகிறது. நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஊட்டச்சத்தான புரதச்சத்தினை வழங்குகின்ற பயிறுவகைகளை தனியப்பயிராகவும், ஊடுபயிராகவும், மாற்றுப்பயிராகவும் பயிரிட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
4. தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் எப்போது குறையும்? வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து நாட்களில் பனியின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். ஜனவரி, பிப்ரவரி மாதங்களைக் குளிர் கால மாதங்கள் என்று சொல்லுவோம். பிப்ரவரியில் வெப்பநிலையானது 30 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ளது. தற்பொழுது அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இந்த பனியின் தாக்கம் அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் குறைந்துவிடும் அவர் தெரிவித்தார்.
5. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சிறுதானியங்கள்: நடிகர் கார்த்தி வேண்டுகோள்!
திரைப்பட நடிகர் கார்த்தி நடத்தும் உழவன் அறக்கடளையின் சார்பாக இளம் இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் கார்த்தி கிராமத்தில் இயங்கிவரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சிறுதானியங்கள் வழங்கவேண்டும் எனக் கூறினார். இவ்விழாவில் நடிகர்கள் சிவக்குமார், ராஜ்கிரண், பொன்வண்ணன் மற்றும் பேராசியர் சுல்தான் இஸ்மாயில் முதலானோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க: விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி|தண்ணீர் பாய்ச்ச செயலி|பயிர் காப்பீடு|முத்ரா கடன்|புயல் எச்சரிக்கை
6. ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் தரும் பயிர் சாகுபடி!
விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டம் சித்தணி கிராமத்தில் விவசாயிகள் முட்டைக்கோஸ் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். முட்டைக்கோஸ் சாகுபடி குறித்து விவசாயி பழனி கூறுகையில் ஹரிராணி என்ற ரகத்தைப் பயிர் செய்து உள்ளதாகவும், முதலில் நிலத்தை நன்றாக தயார் செய்து கொள்ள வேண்டும், என்றும் கூறினார். அதாவது, சமவெளிப்பகுதிகளில் அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 சாம்பல் சத்து உரங்களை அளிக்கவேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
7. உச்சம் தொட்ட கோதுமை விலை!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கோதுமை விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. இதன் விளைவாக, கோதுமை மாவு, ரொட்டி போன்றவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் பொதுமக்களை நேரடியாகப் பாதிப்பதால் அதைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. கோதுமை இறக்குமதி, வெளிச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற விஷயங்களில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், கோதுமையின் மொத்த விலை மற்றும் சில்லரை விலையை குறைப்பதற்காக 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வெளிச் சந்தையில் விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
8. தக்காளி மகசூல் குறைவு! விவசாயிகள் கவலை!!
உடுமலை பகுதிகளில், தக்காளி மகசூல் குறைந்துள்ள நிலையில், விலையும் தொடர் சரிவை சந்தித்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரமாக, உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், வியாபாரிகள் வருகை குறைந்ததால், விலை தொடர்ந்து சரிந்து வருகிறதுகடந்த மாதம், 14 கிலோ கொண்ட பெட்டி, 350 ரூபாய் வரை விற்று வந்த நிலையில், தற்போது, ரகத்திற்கு ஏற்ப, 160 முதல், 200 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. தொடர் பனி மற்றும் திடீர் மழை காரணமாகவும், தக்காளி செடி மற்றும் காய்கள் பாதித்து, மகசூல் குறைந்துள்ள நிலையில், விலை சரிவால், விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
9. தங்கம் விலை வீழ்ச்சி! இன்றைய விலை நிலவரம்!
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.42,560 க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.5,320க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
10. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நீடிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1454 கன அடியாக இருந்த நீர்வந்தது, இன்று காலையும் அதே நிலையில் நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 103.76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.77
அடியாக உள்ளது.
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000!- விபரம் உள்ளே
20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட் சாகுபடி
Share your comments