1. விவசாய தகவல்கள்

முள்ளங்கி விவசாயிகள் கண்ணீர்! - விவசாயிகளின் லாபம் ரூ.0

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
Radish farmers tears! - Farmers profit Rs.0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முள்ளங்கி விவசாயிகளிடம் ஒரு ரூபாய்க்கு விலை கேட்கப்பட்ட முள்ளங்கி, வியாபாரிகளின் சூழ்ச்சியால் ரூ.78 க்கு விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போச்சம்பள்ளி அருகே விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரியிலுள்ள பனங்காட்டுர், போச்சம்பள்ளி, ஜம்புகுட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய் ஆகிய பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

குறைந்தநாட்களில் லாபம் தரும் பயிர் என்னும் காரணத்தால் பல விவசாயிகள் இம்முறை முள்ளங்கி பயிரை பயிரிட்டிருந்தனர். விளைச்சல் அதிகமாக இருந்த போதிலும் நல்ல விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் துக்கத்தில் உள்ளனர்.

ஒரு ரூபாய்க்கு இடைத்தரகர்கள் விலை கேட்டதால் விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமலே விட்டு விட்டனர். இந்த முள்ளங்கி பயிர்களை, வயலை சீரமைத்து தருவதாக கூறி பல வியாபாரிகள் கூலி ஆட்கள் மூலம் முள்ளங்கியை அறுவடை செய்து விற்று லாபம் பார்க்கின்றனர். 1 ரூபாய்க்கு விலை கேட்கப்பட்ட முள்ளங்கி தற்போது கிலோ 78 ருபாய் வரை விலை போகிறது.

வேர்வை சிந்தி, நீர் பாய்ச்சி, இரவும் பகலும் பாதுகாத்து, முதலீடு செய்த முள்ளங்கி விவசாயிகள் துளியளவும் லாபமின்றி கடும் துக்கத்தில் உள்ளனர். உழைத்த விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் அவர்களை தவிர வியாபாரிகளுக்கு இடைத்தரகர்களுக்கும் கிடைத்தது என்பது மேலும் வேதனையளிக்கிறது.

முள்ளங்கி அறுவடை செய்தபின்னர் இடைத்தரகர்கள் 1 ரூபாய்க்கு விலை கேட்டனர். பல விவசாயிகள் இந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் விற்று பெரும் நஷ்டமடைந்துள்ளனர். பல விவசாயிகள் அறுவடை செய்யாமல் பயிரை அப்படியே விட்டு விட்டனர்.

வயலை சீரமைத்து தருவதாக கூறி பல வியாபாரிகள் கூலி ஆட்கள் மூலம் முள்ளங்கியை அறுவடை செய்து விற்று லாபம் பார்க்கின்றனர்.

கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்பட்ட 30 லோடு முள்ளங்கி. 30 கிலோ கொண்ட முள்ளங்கி மூடை ஒன்றிற்கு 200 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த கணக்கில் ஒரு கிலோ முள்ளங்கி 7 ரூபாய் ஆகின்றது. இது சில்லறை கடைகளில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 க்கும் விலைபோகிறது. மயிலாப்பூர் சாலையிலுள்ள நீல்கிரிஸ் இல் ஒரு கிலோ ரூ.78 க்கு விலை போகிறது.

முள்ளங்கியின் விலை 

  • கொள்முதல் விலை - ரூ.1
  • வியாபாரிகளுக்கு கிடைத்த முள்ளங்கி இலவசம்
  • கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.7
  • சில்லறை கடைகளில் கிலோ ரூ.40-50
  • மயிலாப்பூர் நீல்கிரிஸில் கிலோ ரூ.78
  • விவசாயிகளின் லாபம் ரூ.0

அனைவரும் லாபமிட்டி வரும் வகையில் விவசாயிகள் லாபமடையாததற்கு காரணம் மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் சந்தைப்படுதல் குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டாததே என்று குற்றச்சாட்டு எழுகிறது.

மேலும் படிக்க

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: வருகிறது உத்தரவாத பென்சன் திட்டம்!

இந்துப்பு vs சாதாரண உப்பு : வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்

English Summary: Radish farmers tears! - Farmers profit Rs.0 Published on: 08 February 2023, 12:28 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.