1. விவசாய தகவல்கள்

தென்னையில் காண்டாமிருக வண்டு - ஒருங்கிணைந்த தடுப்பு முறை

Deiva Bindhiya
Deiva Bindhiya
தென்னையில் காண்டாமிருக வண்டு - ஒருங்கிணைந்த தடுப்பு முறை
Rhinoceros beetle in coconut - an integrated control system

‍‍தமிழகத்தில் 2011-12 ஆம் ஆண்டு 430.7 ஹெக்டேர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டில் 4515.6 மெட்ரிக் டன்கள் அளவிலான தென்னை சாகுபடி செய்யப்பட்டது.

‍‍இந்தத் தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டின் தாக்கம் மிகுந்த வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இந்த வண்டினால் 10 முதல் 15% வரை மகசூல் இழப்பை ஏற்படுத்த வல்லது.

‍‍இத்தகை கொடிய வண்டின் வாழ்வியல் பற்றியும் அதனைக் கட்டுப்படுத்தும் தடுப்பு முறைகள் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

வாழ்க்கை சுழற்சி:

முட்டை : பெண் வண்டு 130 முதல் 150 முட்டைகளிடும். முட்டைகள் எருக்குழிகள் அல்லது பூமியிலிருந்து 5 முதல் 15 செ. மீ ஆழத்தில் காணப்படும். காலம் - 8 முதல் 18 நாட்கள் வரை.

இளம்புழு : வெள்ளைப் பழுப்பு நிறத்தில், C வடிவத்தில் எருக்குழிகள் அல்லது நிலத்திற்கு அடியில் 5 முதல் 15 செ.மீ. வரை அடியில் இருக்கும்.

புயூபா : மண்ணிற்கடியில் 0.3 முதல் 1 மீ ஆழத்தில் இருக்கும்.

முதிர்நத வண்டு : தடிமனாகவும் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆண்களுக்குப் பண்களை விடக் கொம்பு நீளமாக இருக்கும்.

சேதத்தின் அறிகுறி:

  • மத்திய சுழலில் துளைகள்
  • மைய சுழலில் ஒட்டிக்கொண்டிருக்கும் மெல்லப்பட்ட நார் கொண்ட துளைகள்
  • இலைகளில் முக்கோண வெட்டுக்கள்

தடுப்பு முறைகள்:

  • தோப்பில் உள்ள அனைத்து இறந்த மற்றும் பூச்சியுற்ற தென்னை மரங்களை அழிக்க வேண்டும்.
  • பூச்சியின் முட்டை, இளம்புழு, புயூபா மற்றும் முதிர்ந்த வண்டினை அழிக்க வேண்டும்.
  • எரு குழிகளில் உள்ள வண்டுகளின் இளம்புழுவை அழிக்க 250 கிராம் நுண்ணுயிரி மெட்டாரைசியம் அனிசோபிளியே வை 750 மி.லி. தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • எரு குழிகளில் 0.1% கார்பாரில் தெளிக்க வேண்டும்.
  • மண் பானையில் 5 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, 1 கிலோ ஆமணக்கை நன்கு கலந்து, பானையைத் தோப்பில் ஏக்கருக்கு 5 வீதம் வைத்தால், வண்டுகள் கவரப்பட்டுக் கொல்லப்படும்.
  • இளநீர் பறிக்கும் பொழுது, கொக்கியைக் கொண்டு வண்டுகளைக் குத்தி எடுக்க வேண்டும்
  • கோடை மழையின் பொழுதும், மழைக் காலங்களிலும் ஒளிப் பொறி வைக்க வேண்டும்
  • தென்னைக் கன்றுகளுக்கு இலைகளுக்கு இடையில் 3 அந்துருண்டை போட வேண்டும்.
  • வேப்பங்கொட்டை தூளை மணலுடன் கலந்து தெளிக்கலாம்.
  • காண்டாமிருக வண்டு இனக்கவர்ச்சி பொறி வைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு

வே. மோகன் ராஜ், இறுதியாண்டு வேளாண் மாணவன்
மின்னஞ்சல்: mohanrajcm7@gmail.com
முனைவர் பா. குணா, இணைப்பேராசிரியர், வேளாண் விரிவாக்கத் துறை, நாளந்தா வேளாண்மைக் கல்லூரி, எம்.ஆர்.பாளையம், திருச்சி
தொலைபேசி எண்: +919944641459
மின்னஞ்சல்: baluguna8789@gmail.com இவர்களைத் தொடர்புகொள்ளவும்.

மேலும் படிக்க:

மூலிகை தோட்டம் அமைக்க 50% மானியம்: செடிகள் முதல் குரோ பேக் வரை பெறலாம்!

இடைத்தரகர்கள் இல்லாமல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வேண்டுமா? இதோ!

English Summary: Rhinoceros beetle in coconut - an integrated control system Published on: 16 March 2023, 01:56 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.