விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க ஏதுவாக, 5 ஆயிரம் விவசாயிகள் மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற்று பயன்பெறும் வகையில், 6,357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இளைஞா்களை விவசாய தொழிலில் ஈா்க்கும் விதமாக, விவசாயிகள், தொழில் முனைவோா்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
இவற்றில் கரும்பு சாகுபடிக்கேற்ற உயா்தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளடங்கிய வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
இதைத்தவிர, இயந்திரங்கள் வாங்க இயலாத சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண் இயந்திரப் பணிகளுக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.800 வீதம், அதிகபட்சமாக ஐந்து ஏக்கா் வரை மானியம் வழங்கப்படும்.
இதன் மூலம் 62 ஆயிரம் ஏக்கரில் உள்ள சுமாா் 37 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 10 கோடி மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.150 கோடி மத்திய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும்.
மின்மோட்டாா் மானியம்
விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டாா் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டாா் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டாா் பம்புசெட்டுகள் பொருத்தவும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் 5 ஆயிரம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, புதிய மின்மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டாா் பம்பு செட்டுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
இதற்குத் தேவைப்படும் ரூ.5 கோடி மத்திய, மாநில, அரசு நிதியில் இருந்து வழங்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க...
நெல் மூட்டைகளை அடகு வைத்து கடன்- சாமர்த்தியமாகச் சுருட்டிய விவசாயி!
அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் - லட்சாதிபதி ஆக வாய்ப்பு!
Share your comments