கோவை மாவட்டத்தில், மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த, ஹெக்டேருக்கு, இரண்டாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு பருவத்திலும், 1,500 ஹெக்டேர் பரப்பில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, பருவமழை பெய்து, பாசன நீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, வேளாண்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, அமெரிக்கன் ராணுவ கட்டுப்படுத்த, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஹெக்டேருக்கு இரண்டாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அந்தந்த வேளாண் அலுவலகங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும், மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு, உழவு மேற்கொள்ளும் போது ஹெக்டேருக்கு, 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இட்டு, விதைக்கும் முன், ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு, பத்து கிராம் நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியான பவேரியா பேசியானா' அல்லது, பத்து கிராம் 'தயோமீதாக்சம் 30 சதவீதம் எப்.எஸ். சேர்த்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.
மக்காச்சோளம் சாகுபடி நிலத்தில், ஹெக்டேருக்கு ஒரு சூரிய விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி வைத்து படைப்புழுக்களை அழிக்கலாம். வரப்பு பயிராக எள், சூரியகாந்தி, சோளம், ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
அமலுக்கு வருகிறது அரிசி ATM- கூட்ட நெரிசலைத் தடுக்க புதிய யுக்தி!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டேருக்கு ரூ.4ஆயிரம்- வேளாண்துறை அறிவிப்பு!
Share your comments