திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாரத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வந்தவாசி வட்டார தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வந்தவாசி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ரெ.பா.வளா்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கத்தரிக்காய், பச்சை மிளகாய், தக்காளி, பீர்க்கை, வெண்டை, பாகற்காய், புடலை, வெள்ளரி, பூசணி, தர்ப்பூசணி, பரங்கி, சுரைக்காய் போன்ற காய்கறிகள் பயிரிடும் வந்தவாசி வட்டார விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, தோட்டக்கலைத் துறை மூலம் அரசு இந்த ஊக்கத்தொகையை வழங்குகிறது.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அணுகி விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
-
காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்காக கொள்முதல் செய்த விதை மற்றும் நடவு செடிகளின் விலைப் பட்டியல்.
-
அடங்கல் சான்று.
-
சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் புகைப்படம்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இணையதளம் மூலம் இத்திட்டம் குறித்த முழு விவரங்களை அறியலாம் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!
PMFBY: வாழைக்கு காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசிநாள்- விவசாயிகள் கவனத்திற்கு!
Share your comments