கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தலா 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பில்,
கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, எருமாபாளையம் சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியிலோ அல்லது திரையில் தோன்றும் 0427 - 2280348 தொலைபேசி எண்ணிலோத் தொடர்பு கொள்ளலாம்.
2. தொழில் முனைவோருக்கு தாட்கோ ஆவின் பாலகம் அமைக்க 30% மானியம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திட்டத்தொகை ரூ.3 லட்சத்தில் பயனாளியின் பங்கு தொகை ரூ.15,000, தாட்கோ மானியம் 30% ரூ.90,000 மற்றும் வங்கிகடன் ரூ.1.95 லட்சத்தில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண்தம்புராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
3. கூட்டுறவுச் சங்கங்களில் புதிய உறுப்பினராக சேர்ந்து கடன் பெற்றுக்கொள்ள அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், மாவட்டத்தில் உள்ள மொத்தம் 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதுவரை கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் புதிய உறுப்பினராக சேர்ந்து கடன் பெற்றுக்கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர்கடன் பெற்று பயன் அடையலாம் என்பது குறிப்பிடதக்கது.
4. திருச்சியில் 'நேரடியாக பண்ணையில் இருந்து வீட்டிற்கு'
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கும் உழவர்சந்தைக்கு செல்ல சிரமப்படும் திருச்சி வாசிகள், விரைவில் தொடங்கப்படவுள்ள 'farm to home' திட்டம் மூலம் அவற்றை தங்கள் வீட்டு வாசலில் வாங்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் இந்த ஆண்டு டிசம்பர் 2-வது வாரத்தில் இத்திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் விற்பனைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் இதற்கான முன் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இத்திட்டம் விரைவில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பயனடைவார்கள்.
5. அன்னூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆறு ஊராட்சிகளில் 4731 ஏக்கர் நிலம் தொழில் பூங்கா அமைப்பதற்காக கையகப்படுத்த உள்ளதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையை வாபஸ் பெற வலுயுறுத்தி அன்னூரில் நவம்பர் 28 ஒரு நாள் கடையடைப்புக்கு நமது நிலம் நமதே அமைப்பு அழைப்பு விடுத்தது. இதனை தொடர்ந்து, அன்னூரில் பேக்கரி, ஹோட்டல், ஜவுளி, மளிகை, பேன்சி உள்ளிட்ட நானூறு கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், அன்னூரில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் நவம்பர் 28 உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.
6. விவசாயி பாஸ்கர் முயற்சிக்கு குவிகிறது பாராட்டு
காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடியை சேர்ந்தவர் பாஸ்கர் 12 ஆண்டாக இயற்கை விவசாயம் செய்கிறார். தற்போது 5 ஏக்கர் நிலத்தில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு உள்ளார். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்பட்ட பாரம்பரிய ரகங்களை அவர் பயிரிட்டுள்ளார். ஒவ்வொரு ரகமும் தனித்தனி மருத்துவ குணம் கொண்டுள்ளது என்கிறார் பாஸ்கரன். காரைக்காலில் ஒரு காலத்தில் விளைந்த கட்டைசம்பா பயிரை தேடி கண்டுபிடித்து மீண்டும் அதனை பயிர் செய்துள்ளார். இதனை மற்ற விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்கவும் முடிவு செய்துள்ளார். இந்தியா வரைபடம் போல நெற்பயிர்களை நடவு செய்து இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வையும் பாஸ்கர் ஏற்படுத்தி வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்க தொகை வழங்கி, பயிர்களை சந்தைப்படுத்தவும் உதவ வேண்டும் என அரசுக்கு பாஸ்கர் கோரிக்கை விடுக்கிறார்.
7. மின் இணைப்பு மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஆய்வு செய்தார்: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
நவம்பர் 28 சென்னை, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை அருகே அமைந்துள்ள மின் கட்டண வசூல் மையத்தில் நடைபெற்று வரும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியினை, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். இயக்குநர்/பகிர்மானம் மா. சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் உள்ளனர்.
8. அதிக மழையால் மாநிலத்தில் ராபி பயிர்கள் விதைப்பு பாதிப்பு
இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக மழை பெய்ததால், கர்நாடகாவில் பல இடங்களில் ராபி பயிர்கள் விதைப்பு தடைபட்டுள்ளது. ராபி பயிர்கள் அல்லது ராபி அறுவடை, குளிர்கால பயிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, இவை இந்தியாவில் குளிர்காலத்தில் விதைக்கப்பட்டு வசந்த காலத்தில் அறுவடை செய்யப்படும் விவசாய பயிர்களாகும். தற்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில் மொத்த இலக்கில் 74 சதவீதம் விதைப்பு செய்யப்பட்டுள்ளது, இது விளைச்சலை பாதிக்கும்.
9. 3வது உலகளாவிய செங்குத்து விவசாயக் கண்காட்சி 2022
3வது உலகளாவிய செங்குத்து விவசாயக் கண்காட்சி, இந்தியா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் புரட்சிகரமான நிகழ்வாகும், முந்தைய இரண்டு பதிப்புகள் உலகளாவிய வெற்றியைப் பெற்றன என்பது குறிப்பிடதக்கது. இந்த முறை, இந்நிகழ்வு 2022 நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் புதுதில்லியில் ITC, துவாரகாவின் Welcom hotel இல் நடைபெற்று வருகிறது. GVF2022 இல்- வணிக வாய்ப்புகளைக் கண்டறிய, புதிய நபர்களைச் சந்திக்க, புதிய திட்டங்களைப் பெற மற்றும் நீண்ட கால ஒத்துழைப்புகளை உருவாக்க, முழு செங்குத்து விவசாயம், கட்டுப்படுத்தப்பட்ட சூழல் மற்றும் நகர்ப்புற விவசாய மதிப்புச் சங்கிலி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு விளையாட்டை மாற்றும் நிகழ்வாகும்.
10. பொங்கல் பரிசு 2023: தமிழக அரசின் புதிய திட்டம் என்ன?
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப் பரிசு ரூ 1000 உடன், மளிகை பொருட்கள் மஞ்சள் பைகளில் வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கான இறுதி முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க:
விவசாயிகள் விளைபொருட்களை அடகு வைத்து ரூ. 75 லட்சம் வரை கடன் பெறலாம்!
Share your comments