பனைமர நாற்றுகளை வாங்கி நடவு செய்யுமாறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. பனைமர நாற்றுகள் வாங்கி, விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குநர் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: தமிழகத்தின் தேசிய மரமான பனை மரத்தை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 'கேட்டதை தரும் கற்பகத்தரு' என்றே பனைமரத்தை தமிழர்கள் அழைத்து வந்தனர்.
இம்மரத்தின் அத்தனை பாகங்களும், அதிலிருந்து கிடைக்கும் பொருட்களும் அளவற்ற பயன்களை கொடுக்கக்கூடியவை. பனையிலிருந்து தமிழர்கள் அழைத்து வந்தனர்.
இம்மரத்தின் அத்தனை பாகங்களும், அதிலிருந்து கிடைக்கும் பொருட்களும் அளவற்ற பயன்பகளை கொடுக்கக்கூடியவை. பனையிலிருந்து கிடைக்கும் நுங்கும், பனபங்கற்கண்டும் மட்டுமே இன்று அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பதநீர் சுவையானது மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியமானது, பதநீரில் அம்மை மற்றும் கண்நோய்கள் தடுக்கப்படுகின்றன. வயிற்றுப்புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது.
தமிழ் சங்கம்: பிரதமர் வருகையும், இளையராஜா பாட்டு கச்சேரியும்! அறிந்திடுங்கள்
தமிழகம்: தக்காளி விலை ரூ. 40க்கு விற்பனை!
பனையால் செய்யப்பட்ட துடைப்பான்கள், இதன் நாறிலிருந்து கயிறுகள், விசிறி, கூடை, காதணிகள், சிறுவர் விளையாடும் காற்றாடி, பனை ஓலை வெடி, வாசல், கால்மிதிகள், தடுக்கள், மீன் மற்றும் இறைச்சி வைக்கும் பெட்டிகள் என நிறைந்தது தமிழர் வாழ்வு.
பனம்பழம் சிறந்த சத்துணவு. இத்தனை சிறப்புகள் வாய்ந்த இம்மரத்தை காக்க, மத்திய, மாநில அரசுகளில், பனை மரஙகளை அதிகரிக்கும் நோக்கில், பனை நாற்றுகள் வழங்குகிறது. சங்கராமநல்லூர்மடத்தூரில் உள்ள அரசு தோட்டக்கலைப்பண்ணையில், தேர்வு செய்யப்பட்ட பனை விதைகளை 3 மாதம் நடவு செய்து, பராமரித்து, அவை சிறிது வளர்ந்த பின்பு, பைகளில் அடைக்கப்பட்டு பனை நாற்றுகளாக வழங்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம்: அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம்!
விவசாய நிலம் மற்றும் தனியார் நிறுவனங்களிலும், மரம் வளர்க்க இடம் உள்ள வீடுகளிலும், கோழிப்பண்ணை மற்றும் குளத்தின் கரைகளிலும் இதனை வளர்க்கலாம்.
தற்போது, சங்கராம நல்லூர் அரசு தோட்டக்கலை, பண்ணையில் நன்கு வளர்க்கப்பட்ட பனை நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு பனை மர நாற்றின் விலை ரூ. 50. அங்கு, 200 நாற்றுகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது.
ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?
எனவே தேவைப்படும் விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நாற்றுகளை பெற்று நடவு செய்யலாம். நாற்று தேவைப்படுவோர், மடத்துக்குளத்திலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், சங்கராமநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையிலும் நேரடியாக வந்து, பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, மடத்துக்குளம் தோட்டக்கலை அலுவலர் காவ்ய தீப்தினியை 9952147266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க:
சென்னையில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: நுழைவு கட்டணம் எவ்வளவு?
Share your comments