இயற்கை வேளாண்மைக்கு தரச்சான்று, விதைச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது.
நஞ்சில்லா வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்டு அங்கக விளைபொருட்களுக்கு அதாவது இயற்கை முறையில் இரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் இன்றி சில விவசாயிகள் சாகுபடி பணிளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு தமிழ்நாடு அரசின் விதை சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் குறைந்த கட்டணத்தில் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது
தற்போது அங்கக விளைபொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும் அங்கக விளைபொருட்களுக்கான அங்ககாடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே நுகர்வோர் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கும் போது அவை உண்மையிலேயே இயற்கை முறை யில் விளைவிக்கப்பட்ட பொருட்களா என்பதற்கான எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இச்சூழ்நிலையில் இதற்கான தரச் சான்று என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
அங்ககச் சான்று அவசியம் (Need for Organic Certificate)
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.சுரேஷ் கூறுகையில், தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படுவதால் இந்தச் தரச்சான்றிதழ் மூலம் அங்கக விளை பொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
அங்ககச் சான்றளிப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விவரக்குறிப்பு , பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர்த்திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதார் நகல் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி திருநெல்வேலி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும்
தற்போது இயற்கை பொருட்களை உற்பத்தி செய்து வரும் விவசாயிகள் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையில் பதிவு செய்து கொள்ளலாம். கார்ப்பரேட் நிறுவனங்களும் இதில் பதிவு செய்து கொள்ளலாம்
இது குறித்து மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள திருநெல் வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள 32 ராஜராஜேஸ்வரி நகர், என் ஜி.ஓ பி காலனியில் இயங்கி வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை 04622554451 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இது குறித்த விவரங்களை https://www.tnocd.net என்ற இணைய தளத்திலும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
விவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்!
மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு!
குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!
Share your comments