நிலக்கடலைப் பயிர்களை இக்காலக் கட்டத்தில் வெட்டுப்புழுக்கள் தாக்குகின்றன. இவ்வாறு வெட்டுப் புழுக்கள் தாக்கினால் என்ன செய்வது, எப்படி மேலாணமை செய்வது போன்ற தீர்வுகள் ஏன்னென்ன முதலானவைகளை இப்பதிவு வழங்குகிறது.
நிலக்கடலையினைத் தாக்கும் புகையிலை வெட்டுப்புழு, ஸ்போடாப்டிரா லிட்டுரா என்ற பூச்சியினத்தைச் சார்ந்தது எனக் கூறப்படுகிறது, இதன் முட்டைக் குவியல்கள் பழுப்பு நிறத்தில் இருக்கின்றன. அதோடு, புழுக்கள் இளம் பச்சை நிறத்திலும், உடலில் கருப்பு நிறத்திலும் இருக்கின்றன. அந்துப் பூச்சியானது பழுப்பு நிறத்திலும், வெள்ளை மற்றும் பழுப்பு நிறக் கோட்டுடனும் இருக்கும்.
சுமார் நூறு மீட்டர் வரிசையில் 8 முட்டைகள் சேர்ந்த கூட்டம் இருந்தால், அது பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, இதனை உடனடியாகத் தடுத்தாக வேண்டும். இந்நிலையில் கட்டுப்படுத்தும் முறைகளை இப்போது பார்க்கலாம்.
நிலக்கடலையுடன் ஆமணக்கு அல்லது சூரியகாந்ந்திப் பயிர்களை பொறிப்பயிராக நடவு செய்யலாம். இவ்வாறு செய்தால், புகையிலை வெட்டுப் புழுக்களுக்குக் காரணமான, பெண் அந்துப்பூச்சியானது ஆமணக்கு மற்றும் சூரியகாந்தி இலைகளின் மேற்புறத்தில் முட்டைகளை இடும். அப்போது அந்த முட்டைகளை நாம் அழிக்க ஏதுவாக இருக்கும்.
ஒரு எக்டருக்கு 2 கிலோ கார்பரில் 50 டபிள்யூபி அல்லது 750 மி.லி குயினால்பாஸ் 25 ஈ.சி. அல்லது 750 மி.லி டைகுளோரோவாஸ் 76 டபிள்யூ.எஸ்.சி அல்லது 300-400 கிராம் டைபுளுபெச்சுரன் 25 டபிள்யூபி மருந்தினைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
அவ்வாறில்லையெனில், எக்டருக்கு 2 சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது அரிசித்தவிடு 12.5 கிலோ, பனங்கட்டி 1.25 கிலோ, கார்பரைல் 1.25 கிலோ, தண்ணீர் 7 லிட்டர் என அனைத்தையும் கலந்து புழுக்களை அழிக்கப் பயன்படுத்தலாம். அதோடு, நியூக்ளியார் பாலிஹெட்ரோசிள் வைரஸைப் பயன்படுத்தி, காய்ப் புழுக்களை அழிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுபோன்ற செயல்களால் புழுக்களை அழித்துப் பயிகளைப் பாதுகாத்தால் நல்ல பலனைப் பெறலாம். எனவே, தகுந்த வேளாண் முன்னறிவிப்புகளுடன் பயிர்களை வளர்த்து பாதுகாத்துப் பயனடைய வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
எண்ணெய் பனை சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!
விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு அறிவிப்பு! ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!
Share your comments