1. விவசாய தகவல்கள்

e-NAM திட்டம் குறித்து தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Special training for horticulture farmers on e-NAM scheme

உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட e-NAM பயிற்சி, இன்றைய சந்தை நிலவரம் குறித்த முழு விவரம் பின்வருமாறு-

e-NAM திட்டம்- விவசாயிகளுக்கு பயிற்சி: விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் ( e-NAM ) செயல்பாட்டில் உள்ளது. e-NAM திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து விவசாயிகள் அறியும் வண்ணம் இன்று (04-09-2023) ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தோட்டக்கலை துறை அலுவலர்களால் அழைத்து வரப்பட்ட தோட்டக்கலை துறைசார்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.

இப்பயிற்சியின் போது e-NAM திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளான மின்னணு ஏல அறை, தர பகுப்பாய்வகம் , பயறு மற்றும் மக்காச்சோளம் தரம் பிரிப்பு இயந்திரம், மிளகாய் வத்தல் பொடி தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றையும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் e-NAM திட்டத்தின் மூலம் விளைபொருட்களை விற்பனை செய்வதையும் நேரடியாக விவசாயிகள் பார்வையிட்டனர். e-NAM திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெற விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் கேட்டுக்கொண்டார்.

இன்றைய சந்தை விலை (நெல், சோளம்):

மதுரை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான இன்றைய (04.09.2023) சந்தை விலை நிலவரம்(குவிண்டாலுக்கு) பின்வருமாறு-

நெல் - அட்சயா - குறைந்தபட்ச விலை ரூபாய் 2400, அதிகபட்ச விலை ரூபாய் 2500. நெல் – RNR - BB - குறைந்தபட்ச விலை ரூபாய் 2350, அதிகபட்ச விலை ரூபாய் 2400.

பருத்தி குறைந்தபட்ச விலை ரூபாய் 5400, அதிகபட்ச விலை ரூபாய் 5500. சோளம் (சிவப்பு) குறைந்தபட்ச விலை ரூபாய் 4200, அதிகபட்ச விலை ரூபாய் 4800. குதிரைவாலி குறைந்தபட்ச விலை ரூபாய் 3500, அதிகபட்ச விலை ரூபாய் 3700. வரகு குறைந்தபட்ச விலை ரூபாய் 3400, அதிகபட்ச விலை ரூபாய் 3500 . மக்கா சோளம் குறைந்தபட்ச விலை ரூபாய் 2200, அதிகபட்ச விலை ரூபாய் 2300. இருங்கு சோளம் குறைந்தபட்ச விலை ரூபாய் 3800, அதிகபட்ச விலை ரூபாய் 3900.

கம்பு குறைந்தபட்ச விலை ரூபாய் 2600, அதிகபட்ச விலை ரூபாய் 2700 . மிளகாய் வத்தல் குறைந்தபட்ச விலை ரூபாய் 12000, அதிகபட்ச விலை ரூபாய் 15000. கூடுதல் விபரங்களுக்கு மேற்பார்வையாளர், உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அவர்களை 04552-251070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தேங்காய்ப் பருப்பு- பருத்தி மறைமுக ஏலம்:

சேலம் விற்பனைக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப்பருப்பு மற்றும் கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப்பருப்பு மற்றும் பருத்தி மறைமுக ஏலம் நாளை 05.09.2023 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறுகிறது. எனவே, சேலம் மற்றும் கொங்கணாபுரம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய்ப்பருப்பு மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு முதுநிலை செயலாளர் / வேளாண்மை துணை இயக்குநர் (சேலம் விற்பனைக்குழு, சேலம்) தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவன் செயலியில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசின் மானியத்திட்டங்கள், தங்கள் பகுதி வேளாண் விளைப்பொருள் ஏல அறிவிப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களும் இச்செயலியில் உள்ளன.

மேலும் காண்க:

ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர்- திட்டம் தொடக்கம்

6 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வறட்சி நிவாரண நிதி

English Summary: Special training for horticulture farmers on e-NAM scheme Published on: 04 September 2023, 04:29 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.