தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் நிலவும் மாறுபட்ட காலநிலையால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், விவசாயிகள் முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
குளிர்காலம் (Winter)
ஆண்டுதோறும் குளிர்காலம் நவம்பரில் துவங்கி பிப்ரவரி வரை இருக்கும்.பிப்ரவரி மாத இறுதியில் குளியல் படிப்படியாக குறைந்துவிடும்.
மைனஸ் - 2 டிகிரி (Minus - 2 degrees)
ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக தமிழக-கேரள எல்லைப்பகுதிகளான கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், தேனி, தென்காசி, ஊட்டி, கூடலூர் உள்ளிட்டவற்றில், பிப்ரவரி மாதத்தில் ஒரு சில நாட்கள் வெப்பம் மைனஸ் - 2 டிகிரி செல்சியஸ் வரைக் குறைந்து உறைபனி ஏற்பட்டது.
மார்ச் மாதத்தில் குளிர் குறைந்து விடும் என்றபோதும் வழக்கத்துக்கு மாறாக இரவில் கடும் குளிரும், பகலில் சுட்டெரிக்கும் வெயில் என மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. இந்த மாறுபட்ட சீதாஷணநிலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
28 டிகிரி (28 degrees)
சராசரியாக பகலில் அதிகபட்ச வெப்பம் 28 டிகிரி செல்கியஸ்சாக இருந்த நிலையில், இரவு வேளையில் அவ்வப்போது பலத்த குளிர்காற்றும் விசியது. இதனால் நீர் ஆதாரங்கள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
விவசாயத்தின் ஆதாரமாக விளங்கும் நீர் ஆதாரங்கள் வறண்டு போகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன. எனவே விவசாயிகள் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயத்திற்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
நீலகிரியில் கருகிய தேயிலைச் செடிகள்! கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள்!
Share your comments