1. விவசாய தகவல்கள்

தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த, இதோ சூப்பர் டிப்ஸ்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Super tips to control white flies that attack Coconut Farm!

சுருள் வெள்ளை ஈக்கள், தென்னை சாகுபடியை பழாக்குகின்றன. தற்போது, இந்த ஈக்களின் தாக்குதல்கள் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் அதிகம் காணப்படுகின்றன. இதற்கு அம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கள், தீர்வுகளை வழங்கியுள்ளனர். விரிவான விளக்கத்தைப் பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் தென்னை மரத்தை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கி. வெங்கடேஸ்வரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: இம்மாவட்டத்தில் சிங்கப்புணரி, எஸ். புதூர், திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஆகிய வட்டாரங்கள் உள்பட 7,332 ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் ரூகோஸ் ஈக்களால் அதிகமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிறமுட்டைகளை, சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன. சுமார் 20 அல்லது 30 நாள்களில் முழு வளர்ச்சியடைந்து ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் தங்கிவிடுகின்றன.

மேலும், இவை காற்று மூலம் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களிலான ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 5 அல்லது 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம், இந்த முயற்சி முற்றிலும் பயனுள்ளதாக இருக்கும்.

மஞ்சள் விளக்குப் பொறிகளை ஏக்கருக்க 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழித்திடலாம்.

மேலும் படிக்க: குறைந்த முதலீட்டில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க விவரங்கள்!

கிரைசோபெர்லா இரை விழுங்கிகள், தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரை விழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பயனளிக்கும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருஷி யந்திர மானியத் திட்டம் 2022: 50% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?

மேலும் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

ஆதார் நகலை கொடுப்பது ஆபத்தா? UIDAI-இன் புதிய அறிவிப்பு!

ஒரு லிட்டர் பால் விலை ரூ.10,000!

English Summary: Super tips to control white flies that attack Coconut Farm! Published on: 30 May 2022, 02:34 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.