தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழைக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கி உள்ளது.
வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின் படி, 2021-22 ஆம் ஆண்டு இந்தியாவில், வாழை 9.59 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 351.31 இலட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும்.
தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டு, வாழை 1.01 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 39.39 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக கோயம்புத்தூர், தேனி, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. திருச்சி, திருநெல்வேலி, கடலூர், தேனி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை முக்கிய வாழைக்கான சந்தையாக தமிழ்நாட்டில் உள்ளது. இவற்றில் அதிகமாக திருச்சி சந்தையிலிருந்து வாழை பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது, கோயம்புத்தூர் சந்தைக்கு லால்குடி, கரூர், முசிறி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்தும், மேலும் தேனி பகுதிகிலிருந்து வாழை திருச்சி சந்தைக்கும் அதிகமாக அனுப்படுகிறது.
கிரிஷி உன்னதி சம்மேளன் 2022: மிகப்பெரிய வேளாண் கண்காட்சி
வர்த்தக மூலங்களின்படி, பண்டிகை காலங்களில் வாழையின் தேவை அதிகரித்தாலும், திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வாழை பெருமளவில் சேதமடைந்து உள்ளதாக அறியப்படுகிறது. இச்சுழலில், விலை முன்னிறிவிப்பு குழு, கடந்த 19 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தைகளில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகளையும் மேற்கொண்டது.
ஆய்வின் முடிவில் அக்டோபர் - டிசம்பர், 2022 மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.22 முதல் 24 வரையும், கற்பூரவள்ளி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.25 முதல் 27 வரையும் மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 40 முதல் 44 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் வரும் காலங்களில் பருவநிலையை பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஜவுளித்துறைக்கான ஊக்கத் திட்டம்: PLI 2.0 என்ன பயன்?
மேலும் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தொலைபேசி: 0422 - 2431405, இயக்குநர் மற்றும் முனை அதிகாரி, தமிழ்நாடு நீர்வளநிலவளத் திட்டம், நீர் நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641003, தொலைபேசி: 0422-6611278 மற்ற விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பழப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641003, தொலைபேசி: 0422-6611269 ஐ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க:
நாடு முழுவதும் 22 மொழிகளில் நில ஆவணம் பார்க்கலாம்: மத்திய அரசு விரைவில் அமல்
Share your comments