பொங்கல் பரிசாகச் செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி ரூபாயும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கரும்பு கொள்முதல் செய்யப்படும் போது விவசாயிகளுக்கு குறைவான தொகையை அதிகாரிகள் வழங்குவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கியதைப் போல், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முழு செங்கரும்பு வழங்க வேண்டும் எனவும், செங்கரும்பை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டப்பட்டு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்திய வண்ணம் இருந்தனர்.
அதன் பிறகு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதோடு, ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33/- ரூபாய். ஆனால், இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது எனவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.
செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை இந்த விடியா அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33/- ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசை எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க
Aadhar: ஆதார் கார்டில் ஈசியா அப்டேட் செய்யலாம் - புதிய வசதி!
இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை செக் பண்ணுவது எப்படி?
Share your comments