1. விவசாய தகவல்கள்

திசு வளர்ப்புத் தாவரங்களும்... இந்தியாவின் ஏற்றுமதியும்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Tissue culture plants and ... India's exports!

திசு வளர்ப்புத் தாவரங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் தாவரம் மற்றும் பயிர்களுக்கான நுண்ணுயிர்களின் பட்டியலை அளிக்குமாறு ஏற்றுமதியாளர்களை அபீடா கேட்டுக் கொண்டுள்ளது. திசு வளர்ப்பு என்பது என்ன என்பதைப் பற்றியும், அபீடாவின் நோக்கம் பற்றியும், இந்த பதிவில் பார்க்கலாம்.

தாவர திசு வளர்ப்பு என்பது தாவர உயிரனு அல்லது மலட்டுதன்மையான உறுப்புகளை, சத்துள்ள மற்றும் சுற்றுப்புற சார்ந்த நிலையில் வளர்ப்பதாகும் (in vitro). தாவர உயிரனு  மற்றும் திசுவளர்ப்பு என்பவை, ஒரு செடியின் வளர்ப்பு  பகுதியிலிருந்து, வளர்கரு திசு, திசு துகள், தோலின் மேல் தடிப்பு, உயிர்த்தாது  மூலம் மறுவளர்ச்சி பெற இயல்பவையாகும். இவை ஆராய்ச்சி மற்றும் வணிகத்திற்கு பயன்படுபவை என்பது குறிப்பிடதக்கது.  திசு வளர்ப்பு என்பது  வணிக அமைப்பிற்கு மற்றொரு பெயராக நுண் பயிர் பெருக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. நுண் பயிர் பெருக்கம் என்பது, ஒரு வளர்ப்பு ஊடகத்தில் இடப்படும் செடிபாகத்திலிருந்து(explants) அல்லது வளர்திசு உயிரனு மூலம், ஒரு புதிய பயிரை உருவாக்குவது என்பது குறிப்பிடதக்கது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபீடா, திசு வளர்ப்பு தாவரங்களினுடைய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், `இலை, உயிருள்ள தாவரங்கள், வெட்டப்பட்ட மலர்கள் மற்றும் நடவுப் பொருள்கள் ஆகிய திசு வளர்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தல்' என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு ஒன்றை நடத்தியது என்பது குறிப்பிடதக்கது.

முதல் முறையாகத் திசு வளர்ப்பு ஆய்வகங்களோடு நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், பல நாடுகளில் உள்ள திசு வளர்ப்பு அமைப்புக்கான சமீபகால தேவைகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகளை, இந்திய ஏற்றுமதியாளர்கள் எவ்வாறு அணுகுவது என அபீடா அதிகாரிகள் விளக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து, திசு வளர்ப்பு தாவரங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் தாவரம் மற்றும் பயிர்களுக்கான நுண்ணுயிர்களின் பட்டியலை அளிக்குமாறு ஏற்றுமதியாளர்களை அபீடா கேட்டுக்கொண்டுள்ளதும் குறிப்பிடதக்கது.

ஏற்றுமதியாளர்கள், இந்தியாவில் கிடைக்கும் வளர்ப்புத் தாவரங்கள், வனத் தாவரங்கள், தொட்டிச் செடிகள், பழ நாற்றுகள், அலங்காரச் செடி நாற்றுகள், மற்றும் நடவு செய்வதற்கான பொருள்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்த ஒரு சர்வதேச கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டுமென, இந்தியாவிடம் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கருத்தரங்கில் திசு வளர்ப்பு குறித்த சிக்கல்கள், அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளும் விவாதிக்கப்பட்டுள்ளது.

விடுகதை: காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?

இந்தியாவின் திசு வளர்ப்பு தாவரங்களை இறக்குமதி செய்யும் முதல் 10 நாடுகள் நெதர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், கென்யா, செனகல், எத்தியோப்பியா மற்றும் நேபாளமாகும். திசு வளர்ப்பு ஆலைகளின் ஏற்றுமதி 2020 -21ம் ஆண்டுகளில் சுமார் 17.17 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. நெதர்லாந்துக்கு மட்டும் 50% ஏற்றுமதியை இந்தியா செய்து வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க:

முருங்கை... நுனி கிள்ளுதல் ஏன் அவசியம்?

தோல் பிரச்சனைகளை தீர்க்க உதவும் விலாமிச்சை வேர்!

English Summary: Tissue culture plants and ... India's exports! Published on: 13 May 2022, 10:39 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.