சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும் கீழ்கண்ட பாரம்பரிய உணவுகள், எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- பாரம்பரிய உணவுகள்
- அடுமனைப் பொருட்கள்
- பிழிதல்
- உடனடி தயார்நிலை உணவுகள்
பயிற்சியானது, கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வாயில் எண் 7, மருதமலை சாலை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும். இத்தொழில் நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1,770/- (ரூ.1,500 + GST 18%) செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவரை, தொலைபேசி எண்: 0422-6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க:
புதிதாக "கால்நடை மருத்துவர்" செயலி: இனி உடனடி தகவல் பெறுங்கள்
Share your comments