TNEB:1000 யூனிட் இலவச மின்சாரம்! அமைச்சர் புதிய அறிவிப்பு, சுய தொழில் செய்பவர்களுக்குப் பென்சன்!மத்திய அரசின் திட்டம், மழையால் பயிர்கள் கடும் பாதிப்பு; டெல்டா பகுதியில் கணக்கெடுப்பு தீவிரம், திருப்பூர் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு, பொறியியல் சார்நிலை பதவிகளில் 1,083 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு, மீன் வளத் துறைக்கு கூடுதல் நிதி, அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் சேதம்! கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் கவலை முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: பம்ப்செட் மானியம்|1000 யூனிட் இலவச மின்சாரம்|இறால் மானியம்|ரூ.20 லட்சம் கோடி|பயிர்காப்பீடு
1. TNEB: 1000 யூனிட் இலவச மின்சாரம்! அமைச்சர் புதிய அறிவிப்பு!
விசைத்தறிக்கு, 1,000 யூனிட் இலவச மின்சார பயன்பாடு தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என, மினமின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஈரோட்டில் நேற்று, கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் மேடை நிகழ்ச்சி நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், விசைத்தறி ஒன்றுக்கு இதுவரை, 750 யூனிட் இலவச மின்சாரம் என்பது, 1,000 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது என்றும், கைத்தறிக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம் இனி, 300 யூனிட்டாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், விசைத்தறி மற்றும் கைத்தறிக்கு கூடுதலாக வழங்கப்படும் இலவச மின்சார யூனிட்டுக்கான தொகையை, அரசு சார்பில் நேரடியாக மின்வாரியத்துக்கு மானியமாக செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
2. சுய தொழில் செய்பவர்களுக்கு பென்சன்!மத்திய அரசின் திட்டம்!
சொந்த தொழில் செய்வோருக்குப் பென்சன் வழங்குவதற்கு மத்திய அரசு சிறந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்தத் திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி லகு வியாபாரி மாந்தன் யோஜனா திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு கடந்த 2019ஆம் ஆண்டின் மாதம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 40 எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஏற்றவாறு மத்திய அரசு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. குறிப்பாக, சாலைகளில் கோடிக்கணக்கான மக்கள் கடைகளை அமைக்கின்றனர். எந்த விதமான ஓய்வூதியப் பயன்களும் அவர்களுக்குக் கிடைக்காது. இதன் காரணமாகவே இந்த திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி|தண்ணீர் பாய்ச்ச செயலி|பயிர் காப்பீடு|முத்ரா கடன்|புயல் எச்சரிக்கை
3. மழையால் பயிர்கள் கடும் பாதிப்பு; டெல்டா பகுதியில் கணக்கெடுப்பு தீவிரம்!
டெல்டா மாவட்டங்களில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் துறையினர் தீவிரமாக கணக்கெடுத்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூரில், 3.47 லட்சம் ஏக்கர், திருவாரூரில், 3.75, நாகையில், 1.67, மயிலாடுதுறையில், 1.80 லட்சம் ஏக்கர் என, மொத்தம், 10.69 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. காலநிலை மாற்றத்தினால் பெய்த மழையால் பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர. அதே போன்று, அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்துள்ள நெல்லும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளாண் துறையினர் உள்ளிட்டோர் கணக்கெடுப்பு பணியினை நேற்று முன்தினம் தொடங்கி செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் நெற்பயிர்கள், 25 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் நெற்பயிர், 34 ஆயிரத்து, 500 ஏக்கர், உளுந்து, 37 ஆயிரம் ஏக்கர் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக முதற்கட்டமாக தெரியவந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில், 17 ஆயிரத்து, 500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கி உள்ளது. இது குறித்து வேளாண் துறை அலுவலர்கள் கூறுகையில், 'மழையால் வயல்களில் நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டதால், அறுவடை செய்ய சிரமமாக இருக்கும். இன்னும், இரண்டு நாட்கள் கடந்த பின் தான், பாதிப்பு முழுமையாக தெரியும். அதை அரசுக்கு அறிக்கையாக அளிக்கப்படும்' என்று கூறியுள்ளனர்.
மேலும் படிக்க:இறால் வளர்ப்பு 60% மானியம்|35% மானியக் கடன்|15000 ஏக்கர் நெற்பயிர்கள்|வங்கி மேளா|ஆவின்|தங்கம் விலை
4. இந்திய பட்ஜெட் 2023 ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக விவசாயிகள் கருத்து!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்தக் கூடிய வகையிலான திட்டங்களுடன் நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்கிற பெரும் எதிர்ப்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்குப் பெருமளவில் ஏமாற்றத்தைத் தந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாகத் தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சேர்ந்த விவசாயிகள் பட்ஜெட் திருப்தியளிக்கவில்லை ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாகக் கூறி வருகின்றனர். இது குறித்து வழக்கறிஞரும், விவசாயியுமான ஜீவக்குமார் கூறுகையில், ``விவசாயத்திற்கு என தனிப் பட்ஜெட் நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். விவசாயத்தைத் தொழிலாகக் கருதாமல் பொதுசேவையாக அறிவித்து ஒன்றிய அரசு விவசாயிகள் வாழ்வு மேம்பட திட்டங்கள் மூலம் உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பிரதமர் மோடி அரசினுடைய கடைசி பட்ஜெட் இது என்பதால் விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தோம். அந்த நிலையில் இந்த இந்திய பட்ஜெட் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
5. அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் சேதம்! கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் கவலை!
திடீர் மழையால், கடலுார் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். காவிரியின் கடைமடையான கடலுார் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு, சாதகமான பருவநிலை சூழலால் கடலுார், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, பெண்ணாடம் திட்டக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கடைமடையில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் விளைநிலத்தில் சாய்ந்துள்ளன. விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஊடு பயிரான இளம் உளுந்து பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
6. திருப்பூர் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தமாக 21 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவ்வேலைகளுக்கு சம்பளம் ரூ.12,000 எனக் கூறப்படுகிறது. குறைந்த பட்ச வயது வரம்பு 18 ஆக இருக்கிறது. அதிகபட்சமாக 28 ஆக இருக்கிறது. கல்வித்தகுதியாக இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதிக்குள் திருப்பூரின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tiruppur.nic.in எனும் பக்கத்தைப் பார்க்கலாம்.
7. பொறியியல் சார்நிலை பதவிகளில் 1,083 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகளில் காலியாக உள்ள 1,083 பணியிடங்களை நிரப்ப மே மாதம் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மார்ச் 4-ம் தேதி கடைசி நாள் - ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பதவிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சித் துறையில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பதவி யில் 794 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு மே 27-ம் தேதிகாலை, மாலை என இரு வேளைகளில் நடத்தப்பட உள்ளது. தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 4-ம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய மார்ச் 9 முதல் 11-ம் தேதிஅவகாசம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
8. கிராம மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது
தருமபுரியில் விலை நிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை பிடிக்க வனத்துறை சார்பில் ஆனைமலையில் இருந்து சின்னதம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு காட்டு யானை வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக விலை நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வந்த காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி வெளியேற்றுவதற்காக ஆனைமலை பகுதியில் இருந்து 45 வயது கும்கி யானை சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டு பாப்பாரப்பட்டியில் தங்க வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கும்கி யானையின் உதவியுடன் பத்திரமாக பிடிக்கப்பட்டது. தற்போது யானையை சாந்தப்படுத்தி பின்னர் அதனை ஆனைமலைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க
TNAU வழங்கும் விதைப் பரிசோதனை குறித்து ஒரு நாள் கட்டணப் பயிற்சி
Share your comments