1. விவசாய தகவல்கள்

இன்றைய வேளாண் தகவல்களும் மானியங்களும்!

Poonguzhali R
Poonguzhali R
Today's Agriculture Information and Grants!

உளுந்து சாகுபடிக்கு 100% மானியம் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என்று வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன், நீர் நுட்ப மையம் வழிகாட்டுதலின்படி உளுந்து சாகுபடி செயல்பட்டு வருகிறது. உளுந்து சாகுபடிக்கு 100 சதவீதம் மானியத்துடன் செயல்படுத்த தயாராக உள்ளது என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் விதைகள், உரங்கள் மற்றும் நடமாடும் நீர்தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு பலனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிகளுக்குக் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு ராபி பருவத் தோட்டக்கலைப் பயிர்களுக்குக் காப்பீடு செய்யும் முறையானது பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது. தோட்டக்கலைப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய கடைசி தேதிகளாக கொத்தமல்லிக்கு டிசம்பர் 31-ஆம் தேதியும், வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றுக்கு ஜனவரி 31-ஆம் தேதியும், வாழை, மரவள்ளி கிழங்குக்கு பிப்ரவரி 28-ஆம் தேதியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, உரிய காலத்திற்குள் விவசாயிகள் காப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கறவை மாட்டுப்பண்ணையம் அமைக்க ஒரு மாதச் சுயவேலை பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் கறவைமாட்டுப் பண்ணையம் அமைக்க ஒரு மாதகாலச் சுயவேலை வாய்ப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது வரும் நவம்பர் 7-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கறவை மாட்டினங்கள், கொட்டகை அமைப்பு, தீவனமளித்தல், இனவிருத்தி முறை, தடுப்பூசி மற்றும் நோய் மேலாண்மை ஆகியன குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சியில் இணைய விரும்பும் ஆர்வலர்கள் தங்களது ஆதார் நகல், புகைப்படம், ஆகியவற்றுடன் ரூ. 1000 செலுத்திப் பதிவு செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு முதலைமைச்சர் விருது: மிஷன் இயற்கை திட்டத்தினைத் தொடங்கி வைத்தார் அன்பில்மகேஷ் பொய்யாமொழி!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த பொள்ளேபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிஷன் இயற்கை என்ற சுற்றுச் சூழல் கல்வி திட்டத்தினைத் தொடங்கி வைத்தார் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சிறந்த பசுமைப்பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் விருது வழங்கப்பட உள்ளது. இளைய தலைமுறையினர் தங்கள் மாநிலத்தின் பல்லுயிர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதோடு, பருவநிலை மாற்ற இயக்கம் ஈரநிலங்கள் பாதுகாப்பு இயக்கம், பசுமை தமிழகம் முதலான செயல்பாடுகளும் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! வெளியானது புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கவும் தமிழக அரசு சார்பாக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee Early Career Program-க்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது.

நெல் ஈரப்பத அளவை 19% உயர்த்த மத்திய அரசு அனுமதி!

நெல்லின் ஈரப்பத அளவினை 19% உயர்த்த வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையினை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்த அனுமதி வேண்டும் எனத் தமிழக உணவுத் துறை முதன்மை செயலாளரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குச் சில தளர்வுகள் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

மேலும் படிக்க

கொய்யா சாகுபடிக்கு ரூ.60 ஆயிரம் மானியம், விவரம்!

19% ஈரப்பதம் கொண்ட நெல்லைக் கொள்முதல் செய்ய அனுமதி!

English Summary: Today's Agriculture Information and Grants! Published on: 29 October 2022, 03:29 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.