பருவமழை பொய்த்ததால், நகரில் உள்ள சில்லறை கடைகளில் தக்காளி விலை கிலோ ரூ.80ஐ தாண்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும், இது குடியிருப்பாளர்களின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகச் சந்தைக்கு வரும் தக்காளியின் அளவு பாதிக்கு மேல் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
காந்திபுரம் மார்க்கெட்டைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஜி முருகன் கூறியதாவது, கடந்த சில மாதங்களாகத் தக்காளி விலை பெரிய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. 2021 நவம்பரில், விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிலோ ரூ.130ஐ எட்டியது. இந்த ஆண்டு பிப்ரவரியில் கிலோ ரூ.10 ஆகக் கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், அதன்பின் படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் சில்லறை விற்பனைக் கடைகளில் 1 கிலோ தக்காளியின் விலை ரூ.70 ஆக இருந்தது. தற்போது, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மொத்த சந்தையில், 1 கிலோ தக்காளி, தற்போது, கிலோ, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்போது விலை கிலோ 80 ரூபாய். இன்னும் சில வாரங்களுக்கு விலை குறையாமல் இருக்கலாம்,'' என்றார்.
ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த வெரோனிகா ராணி கூறுகையில், பெரும்பாலான சமையல் வகைகளுக்கு தக்காளி இன்றியமையாத பொருளாக இருப்பதால், விலை உயர்வு பெரும் கவலை அளிக்கிறது. “நான் ஒவ்வொரு முறையும் கடைக்குச் செல்லும்போது குறைந்தபட்சம் 1 கிலோ தக்காளி வாங்கும் பழக்கம் இருந்தது. இப்போது, நான் 500 கிராம் அல்லது 250 கிராம் எனத் தக்காளி வாங்கும் அளவைக் குறைத்துள்ளேன்.
விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், அனைவருக்கும் பலன் இல்லை என்பதை மறுக்க முடியாது. இது குறித்துத் தொண்டாமுத்தூர் அருகே உள்ள புள்ளகவுண்டன்புதூரை சேர்ந்த தக்காளி விவசாயி ராஜாமணி கூறியதாவது; கடந்த இரண்டு மாதங்களாக பருவமழை பொய்த்ததால் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. “மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசமாகின. மழையால் பாதிக்கப்படாமல் இருந்த விவசாயிகள் மட்டுமே விலைவாசி உயர்வால் பயனடைந்துள்ளனர். அப்படிப்பட்ட விவசாயிகள் மிகக் குறைவு. ஒரு கூண்டு (14 கிலோ) ரூ. 1,000 கிடைக்கும் என்பதால், விளைந்த பயிர்களைக் கொண்ட விவசாயிகள் அதிர்ஷ்டசாலிகள் என்று அவர் கூறினார்.
"சில மாதங்களுக்கு முன்பு ஒரு கூடைக்கு ரூ.130 மட்டுமே கிடைத்தது. விலைவாசி உயர்வால் உற்சாகமடைந்து, தற்போது ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் இறங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் அன்றாடம் தக்காளையை வாங்கி உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வு வருத்தம் தரக் கூடிய செய்தியாக இருக்கிறது.
மேலும் படிக்க
Share your comments