உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது விவசாயம். புதிய திட்டங்களை கொண்டு வரும் போது அதில் அடிபடுவது விவசாய நிலங்கள் தான். அதே நேரத்தில் பலர் விவசாய நிலங்களை வாங்கி அதில் புதிய வேளாண் நடைமுறைகளை செயல்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
விவசாய நிலத்தின் விலையானது இடம், மண்ணின் தரம், உள்கட்டமைப்பு மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து கணிசமாக மாறுபடும். இந்தியாவை தவிர்த்து வேறு எந்த பகுதியில் குறைவான விலையில் விவசாய நிலங்களை வாங்கலாம் என்பது குறித்து ஆராய்ந்தோம். காரணம், பிசினஸ் ரிசர்ச் கம்பெனியின் கூற்றுப்படி, ஆசிய-பசிபிக் நாடுகளில் மிகப்பெரிய விவசாய சந்தை உள்ளது. வட அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகளவில் விவசாய நிலங்களை வாங்க சிறந்த 5 பகுதிகள் மற்றும் அப்பகுதியில் பயிரிடப்படும் பயிர்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு-
1.கேமரூன்- ஒரு ஹெக்டேர் விலை - $550
கேமரூன் 3.9 மில்லியன் டன் அளவுடன் வாழைப்பழ உற்பத்தியில் மூன்றாவது இடம் வகிக்கிறது. பாமாயில் உற்பத்தியில் ஏழாவது இடம். கோகோ உற்பத்தியில் 5-வது இடம் வகிக்கிறது.
2.நைஜீரியா- ஒரு ஹெக்டேர் விலை - $700 (வெளிநாட்டு முதலீட்டாளர் வரம்பு - 500 ஹெக்டேர்)
நைஜீரியா மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, கினி சோளம் ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது. குறைந்தபட்சம் 70% மக்கள் பயிர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு (59.6 மில்லியன் டன்கள்), கிழங்கு (47.5 மில்லியன் டன்கள்), சாமை (3.3 மில்லியன் டன்கள்), கௌபீ (2.6 மில்லியன் டன்கள்), சோளம் (6.8 மில்லியன் டன்கள்) உட்பட பல உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடு நைஜீரியா.
2 மில்லியன் டன்களுடன் ஓக்ராவின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. தினை (2.2 மில்லியன் டன்), பாமாயில் (7.8 மில்லியன்), எள் விதை (572 ஆயிரம் டன்), கோகோ (332 ஆயிரம் டன்) உற்பத்தியில் நான்காவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது.
3.வடக்கு ஸ்வீடன்- ஒரு ஹெக்டேர் விலை: $2764
தெற்கு ஸ்வீடனில் பொதுவாக வளர்க்கப்படும் பயிர்கள் கோதுமை, ராப்சீட் மற்றும் பிற எண்ணெய் தாவரங்கள் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகும். அதே சமயம் பார்லி மற்றும் ஓட் ஆகியவை வடக்கு ஸ்வீடனில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
4.தென்னாப்பிரிக்கா- ஒரு ஹெக்டேர் விலை: $2,900
தென்னாப்பிரிக்கா சிக்கரி வேர்கள் மற்றும் திராட்சைப்பழங்களை உற்பத்தி செய்வதில் நான்காவது பெரிய நாடாகும்.
அதே நேரத்தில் தானியங்களின் உற்பத்தியில் ஐந்தாவது இடம். பச்சை மக்காச்சோளம் உற்பத்தியில் ஏழாவது இடம். ஆமணக்கு விதைகள் மற்றும் பேரிக்காய் உற்பத்தியில் 9-வது இடம். நார் பயிர்கள் உற்பத்தியில் 10-வது இடம்.
5.உருகுவே- ஒரு ஹெக்டேர் விலை: $3,342
பிரேசில், கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற ஏற்றுமதியாளர்களுடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 10 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. உருகுவே விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் கெய்ர்ன்ஸ் குழுமத்தில் உறுப்பினராக உள்ளது.
நிலத்தின் விலைகள் காலப்போக்கில் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் ஒவ்வொரு நாட்டிலும் வெளிநாட்டவர் நிலம் வாங்குவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். எனவே, நீங்கள் அந்நிய நாடுகளில் நிலத்தை வாங்குவதற்கு முன் அங்குள்ள சட்ட ஒழுங்குமுறைகள், பயிரிடும் பயிர்கள், அதற்கான சந்தை நிலவரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு சரியான திட்டமிடல் அவசியம் என்பதை மறவாதீர்.
இதையும் காண்க:
கரண்ட் பில் கட்ட சொல்லி போன் வருதா? இதை நோட் பண்ணுங்க
அடுத்த 5 நாட்களில் கனமழை பெய்யும் மாவட்டங்களின் லிஸ்ட்- இவ்வளவு பெருசா?
Share your comments