தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பற்றிய இரண்டு நாட்கள் பயிற்சி வருகிற 24 ஆகஸ்ட் 2022 மற்றும் 25 ஆகஸ்ட் 2022 தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் பின்வரும் உணவு பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- தோசை மிக்ஸ்
- டேக்ளா மிக்ஸ்ட
- கீர் மிக்ஸ்
- அடை மிக்ஸ்
- பிசிபெலா பாத் மிக்ஸ்
- குளோப் ஜாமூன் மிக்ஸ்
- ஐஸ் கீரிம் மிக்ஸ்
- தக்காளி சாதம் மிக்ஸ்
- சூப் மிக்ஸ்
எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள் ரூ.1770 (ரூ.1500 + Gst 18%) - பயிற்சி முதல் நாளன்று கட்டணமாக செலுத்த வேண்டும்.
பயிற்சியானது, கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வாயில் எண் 07, (மருதமலை சாலை) வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர், தொலை பேசி எண்: 0422-6611268. மின்னஞ்சல்: phtc@tnau.ac.in தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க:
தமிழக அரசு பயிர் காப்பீட்டு பிரீமியம் மானியத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி ஓதுக்கீடு
AIIMS மருத்துவமனைகளுக்கு புதிய பெயர் சூட்ட நடவடிக்கை தீவிரம்
Share your comments