விவசாயிகள் புதிய நிலம் வாங்குவது அல்லது பண்ணை இயந்திரங்களை வாங்குவது / நவீனப்படுத்துதல், தானிய சேமிப்புக் கிடங்குகளை அமைத்தல். நீர்ப்பாசன தடங்கள் அமைத்தல் அல்லது வேறு எந்த பண்ணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த கிசான் சுவிதா கடன்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில், விவசாயிகளுக்கு விவசாய கடன்களை வழங்கும் பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. அத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்களில் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட்.நிறுவனமும் ஒன்று.
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் என்பது ஒரு பொதுஜன-சந்தை மையப்படுத்தப்பட்ட வங்கியாகும், இது நிதி ரீதியாக பாதுகாக்கப்படாத மற்றும் குறைவான பிரிவுகளை பூர்த்தி செய்கிறது மற்றும் இந்தியாவில் நிதி புழக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அக்ரி குழும கடன்கள், கிசான் சுவிதா கடன் மற்றும் கிசான் பிரகதி அட்டை ஆகியவற்றை விவசாயிகளுக்கு இந்த வங்கி வழங்குகிறது. இதில் கிசான் சுவிதா கடன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிசான் சுவிதா கடன்
கிசான் சுவிதா கடன் என்பது அடிப்படையில் விவசாய மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் சார்ந்த கடன் ஆகும். இந்த கடன் திட்டத்தின் படி, இது ஃபிளெக்சிபிள் திருப்பிச் செலுத்தும் விருப்பங்களை வழங்குகிறது. இது பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கியது:
-
பால் பண்ணை
-
பட்டு வளர்ப்பு
-
ஆடு வளர்ப்பு
-
பாலி நர்சரி
-
வெற்றிலை தோட்டம்
-
பன்றி வளர்ப்பு
-
மீன் பிடிப்பு & பராமரிப்பு
-
காளான் விவசாயம்
-
செம்மறி வளர்ப்பு
-
கோழிப் பண்ணை
-
மலர் வளர்ப்பு, தோட்டம் & பராமரிப்பு
-
வேளாண் பண்ணை
-
அரேகனட் பண்ணை பராமரிப்பு
-
பண்ணை கொள்முதல் நிலையம்
-
காய்கறி பண்ணை பராமரிப்பு
-
தேங்காய் பண்ணை பராமரிப்பு
எஸ்பிஐ வங்கி வழங்கும் வேளாண் கடன் திட்டங்கள்! உடனே அணுகி பயன்பெறுங்கள்!!
கிசான் சுவிதா கடன் : சிறப்பம்சங்கள் / நன்மைகள்
-
கடன் தொகை - ரூ. 60,000 முதல் ரூ. 2, 00,000 வரை வழங்கப்படும்
-
கடன் காலம் - 24 மாதங்கள்
-
வட்டி விகிதம் - குறைந்து வரும் கடன் இருப்பு முறையின் அடிப்படையில் ஆண்டுக்கு 23.25 சதவீதம் வழங்கப்படுகிறது. (வங்கியின் MCLR அடிப்படையிலான விலைக் கொள்கையால் நிர்வகிக்கப்படுகிறது).
-
செயலாக்க கட்டணம் - கடன் தொகையில் 1 சதவீதம் (ஜிஎஸ்டி தவிர).
-
கடன் பணியக கட்டணம் - ரூ. 20 ( ஜிஎஸ்டி உட்பட).
-
முத்திரை வரி - மாநில சட்டப்படி.
கிசான் சுவிதா கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி
கிசான் சுவிதா கடன் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ujjivansfb.in/ ஐப் பார்வையிட வேண்டும். அல்லது அருகிலுள்ள வங்கி கிளைகளுக்கு நேரடியாக சென்று கேட்டறியலாம். பின்னர் முறைப்படி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் (ஆதார் அட்டை, முகவரி ஆதாரம், புகைப்படம் போன்றவை) சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வேளாண் கடன் வேண்டுமா? 4 வங்கிகளின் சிறந்த கடன் திட்டங்கள்!
விளைபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க விருப்பமா? கடன் வழங்குகிறது இந்தியன் வங்கி!
Share your comments