திருப்பூா் மாவட்டத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளைப் புனரமைத்து மீன்களை வளா்க்க விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவு தொழில் (Support industry)
விவசாயம் கைகொடுக்காமல் பொய்த்துப் போகும் காலங்களில், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவை மூலம் கிடைக்கும் வருமானம், விவசாயிகளுக்கு குறுகியக் கால வாழ்வாதாரமாக மாறிவிடுகிறது.
அந்த வகையில், மீன்வளர்ப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் பண்ணைக்குட்டைகள் அமைத்து மீன்வளர்க்க 40 சதவீதம் மானியம் வழங்கும் திட்டமும் ஒன்று.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மீன் வளர்ப்பு (Fisheries)
திருப்பூர் மாவட்டத்தில் மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயா்த்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருந்தித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் ஆயிரம் சதுர மீட்டரில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளை புனரமைத்து மீன்களை வளா்க்க உள்ளீட்டு செலவீனத்தில் 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
பண்ணைக் குட்டைகளுக்கு பாலித்தீன் உறையிடுதல் மற்றும் மீன் வளா்க்க ஆகும் உள்ளீட்டு செலவினத்தில் 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் மானியமும், விரால் மீன் வளா்க்க உள்ளீட்டு செலவினத்தில் 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.
ரூ.1.80 லட்சம் (Rs 1.80 lakh)
மேலும், பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளங்கள் மற்றும் கல் குவாரியில் உள்ள நீா் நிலைகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன் வளா்ப்பு செய்திடும் திட்டத்தின்கீழ் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சமும், ஆதிதிராவிட மகளிருக்கு 60 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.80 லட்சமும் மானியமாக வழங்கப்படும்.
தொடர்புக்கு (Contact)
ஆகவே, மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தாராபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டியில் உள்ள நல்லதங்காள் ஓடை அணையில் இயங்கி வரும் மீன் வள அலுவலகத்தை 93848-24520, 96291-91709 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோட்டில் உள்ள மீன் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை 0424-2221912 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!
Share your comments