சம்பா பருவத்திற்கு நடவு செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் பாசியை கட்டுபடுத்த யூரியா, டி.ஏ.பி.,யை குறைவாக பயன் படுத்த வேண்டும் என வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா பருவத்திற்கு, நடவு செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் தற்போது பாசியின் வளர்ச்சி அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நெற்பயிர்களை பாதுகாப்பது குறித்து, மீஞ்சூர் வேளாண் துறை உதவி இயக்குனர் டெல்லி குமார், ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
ஆலோசனைகள்
-
நெல் பயிர்களுக்கு அதிக உரங்களை இடுவதாலும், அதிக நீர் பாசனம் செய்வதாலும், பாசியின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
-
இதனால், நெற்பயிர்களுக்கு சூரிய ஒளி ஊட்டசத்து மற்றும் காற்றோட்டம் சரியாக கிடைக்காமல் போகிறது.எனவே, அதனை தவிர்க்க வேண்டும்.
-
பாசியை கட்டுப்படுத்த திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்தவர்கள் கோனோவீடரைக் கொண்டு நெற்பயிர்களுக்கு இடையே நன்கு கலைத்து விட வேண்டும்.
-
ஒரு ஏக்கருக்கு, 2 கிலோ காப்பர் சல்பேட்டை நீர் பாசனத்தில் கலந்து பயன்படுத்தலாம்.
-
யூரியா, மரம் போன்ற உரங்களை குறைந்த அளவில் பயன் படுத்தினால், பாசியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.
மேலும் படிக்க...
தேங்காய் மற்றும் கொப்பரைக்கு இந்த ஆண்டு குறைந்தபட்சம் என்ன விலை கிடைக்கும்? TNAUவின் கணிப்பு!
உச்சி முதல் பாதம் வரை- எக்கச்சக்க பலன் தரும் மருத்துவ மூலிகை கிராம்பு!
Share your comments