வேளாண்மைப் பல்கலைகழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் கீழ் துாத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் விவசாய கல்லுாரியில் மண், பாசன நீர் பரிசோதனை மற்றும் ஆலோசனை மையம் (Counseling Center) உள்ளது. விவசாய நிலங்களின் மண், பாசன நீர், நிலத்தடி நீர், பயிர் பகுதிகளின் மாதிரிகள், அங்கக கம்போஸ்ட், இயற்கை உரங்கள், பயிர் கழிவுகள், மண் நிவர்த்தி இடுபொருள் மாதிரிகளை இம்மையத்தில் ஆய்வுக்கு கொடுக்கலாம். ஆய்வின் அடிப்படையில் மண்வளம் சார்ந்த பரிந்துரைகளை பெறலாம். மண்ணியல் துறையில் (Department of Geology) ஆய்வுகூட வசதிகளும், நிபுணர்களின் ஆலோசனையும், வழங்கப்படும்.
தொழில்முனைவோர்களுக்கு ஆலோசனை:
விவசாய நிலங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், புதிதாக பழப்பண்ணை, அங்கக பண்ணை, விதை பண்ணை, கால்நடை பண்ணை, துல்லிய பண்ணையம், ஒருங்கிணைந்த பண்ணையம் (Integrated Farm) தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்களுக்கு இம்மையத்தில் ஆலோசனை வழங்கப்படும்.
பயிற்சிக்கு கட்டணம்:
தூத்துக்குடி, திருநெல்வெலி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள், பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள், வேளாண் தொழிற்சாலைகள், உரநிறுவனங்கள், அங்கக இடுபொருள் உற்பத்தியாளர்கள், உணவு பொருள் உற்பத்தி நிறுவனங்கள் (Food Production Companies) இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். ஆய்வு, ஆலோசனை, பயிற்சிக்கு பல்கலை கட்டணம் (Fee) உண்டு.
தொடர்பு கொள்ள:
டீன் இறைவன் அருட்கனி அய்யநாதன்,
மண்ணியல் துறை தலைவர் சுரேஷ்,
கிள்ளிகுளம் விவசாய கல்லுாரி, துாத்துக்குடி.
இணைப்பேராசிரியர் சாலிகா 94865 01060.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை,
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அணுக வேண்டிய முகவரி: துறைத்தலைவர் சண்முகசுந்தரம்,
மண் மற்றும் சுற்றுப்புற சூழலியல் துறை,
மதுரை விவசாய கல்லுாரி.
உதவி பேராசிரியர் கண்ணன், 99764 06231
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயத்தில் வெற்றிப்படியை எட்டிப் பிடித்த இஞ்சினியரிங் பட்டதாரிகள்!
மண்வளத்தை மீட்டெடுக்க சுழற்சி முறை விவசாயத்தை கையிலெடுங்கள்!
Share your comments