நாட்டின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் சரியான நேரத்தில் விவசாயத்திற்காக பணம் பெறுகிறார்கள். ஏனென்றால், பணப் பற்றாக்குறையால் ஏழை விவசாயிகளால் சரியான நேரத்தில் விவசாயம் செய்ய முடியாமல், பாடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் காரணமாக பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. நாட்டின் பல கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றனர்.
ஆனால் இன்றும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்காமல் பல விவசாயிகள் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இத்திட்டத்தைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகள், இந்த திட்டத்தின் கீழ் பயனடைவதற்கான வாய்ப்பை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. ஒன்றிய அரசு பல வழிகாட்டுதல்கள் மூலம் விவசாயிகளை இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வருகிறது.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் பேசும் போது, அவரிடம் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் கீழ் இதுவரை பலன்களை பெற முடியாத விவசாயிகளுக்கான மத்திய அரசாங்கத்தின் திட்டம் என்னெவென்று கேட்டபோது. அதற்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர், இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பதிவு முகாம்களை ஏற்பாடு செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த வழியில் விவசாயிகள் பதிவு செய்யலாம்:
வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர், விவசாயிகள் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாவிட்டால், அவர்கள் PM-Kisan வலைத்தளம் https://pmkisan.gov.in/ க்குச் சென்று Farmer Corner என்ற வசதியை கிளிக் செய்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். இப்போது விவசாயிகள் வீட்டில் இருந்தே எங்கும் அலையாமல் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் தங்கள் சாகுபடி நில ஆவணங்கள், ஆதார் அட்டை, மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு எண் மூலம் pmkisan.nic.in வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
csc மூலம் தொடர்பு கொள்ளவும்
பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற விவசாயிகள் தங்களை பதிவு செய்ய சி.எஸ்.சி. (Common Services Centers) மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய வேளாண் அமைச்சர் கூறினார்.
மொபைல் செயலி மூலம் தகவல்:
விவசாயிகளுக்கு மேலும் தகவல் வேண்டுமானால், பிரதமர் கிசான் போர்ட்டலில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வசதிகளை குறித்து ஒரு செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டது:
விவசாயிகளுக்கு நிதியுதவி நன்மைகளை வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மான் யோஜனா 2019 இல் தொடங்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு அவர்களின் கணக்கில் நேரடியாக பணம் மாற்றப்படுகிறது. தற்போது வரை விவசாயிகளுக்கு மத்திய அரசு எட்டு தவணைகளை வழங்கியுள்ளது. கடைசி தவணை மே மாதம் வந்தது, இதன் போது தவணைகள் சுமார் 9 கோடியே 50 லட்சம் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டது.
மேலும் படிக்க:
எடை இழப்பு: எலுமிச்சை நீரைக் குடிப்பதால் எடை குறையும்?
ஏடிஎம் கட்டணம் அதிகரிப்பு: ஆகஸ்ட் 1 முதல் அமல்!
மீண்டும் தமிழகத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தளர்வுகளின்றி ஊரடங்கு
Share your comments