தென்னை நார்க் கழிவில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது குறித்து வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் விளக்கமாக எடுத்துரைத்துப் பயிற்சி அளித்தார்.
விவசாயிகளுக்குப் பயிற்சி (Training for farmers)
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மணமேல்குடி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, அரிமளம் ஆகிய வட்டார விவசாயிகளுக்காக இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேராசிரியர் விளக்கம் (Professor Description)
இதில் வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் மண்ணியல் உதவிப் பேராசிரியர் முனைவர் செரின், தென்னை நார் கொண்டு உரம் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைகள் பற்றி விளக்கினார்.
தயாரிக்கும் வழிமுறைகள் (Methods of preparation)
அதாவது 4 அடி நீளம், 3 அல் அகலம் உள்ள குழியில் முதலில் 3 அங்குல உயரத்திற்கு தென்னை நாரைப் பரப்பி ஈரப்படுத்த வேண்டும்.
பிறகு நைட்ரஜன் மூலமான யூரியா அல்லது புதிய கோழி எருப்பை பயன்படுத்த வேண்டும்.
உரம் (Compost)
ஒரு டன் தென்னை நார் குழிக்கு 5 கிலோ யூரியாவை சமமாக 5 பகுதிகளாக பிரிந்து மாற்று அடுக்கில் யூரியாவை பயன்படுத்த வேண்டும்.
மேல் அடுக்கு (Top layer)
-
பின்னர் ப்ரோடஸ் மற்றும் டி.என்.ஏ.யூ பயோமினரலைசர் ஆகியவற்றை மேல்அடுக்கில் சேர்க்க வேண்டும்.
-
குறைந்தபட்சம் 4 அடி உயரம் வரை ஒரு குவியலை உருவாக்குவது ஏற்றதாகும்.
கிளறி விடுதல் (Stirring)
-
ஊரக்குவியலைப் பத்து நாட்களுக்கு ஒரு முறை நன்கு கிளறி விடுதல் அவசியமாகும். அது உரக்குழியில் உள்ள காற்றை வெளியேற்றி புதிய காற்று சுழற்சியாகும்.
-
மேலும் காற்றோட்டம் கொடுப்பதற்குத் துளையிடப்பட்ட பி.வி.சி குழாயை உரம் தயாரிக்கும் பொருளில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் செருக வேண்டும்.
60% ஈரப்பதம் (60% humidity)
அறுபது சதவிகிதம் ஈரப்பதத்தைப் பராமரிக்க வேண்டும். உர மூலப் பொருட்கள் நன்கு மட்கியப் பின்பு நன்குச் சலித்து நிழல் பாங்கான இடத்தில் ஈரப்பதத்துடன் வைக்கவேண்டும்.
சந்தேகங்களுக்கு விளக்கம் (Explanation for doubts)
தென்னை நார் கழிவு தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கமும், பயிற்சியின் முடிவில் விவசாயிகளுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் படிக்க...
ஆசிரியர் தொழிலுடன் சேர்த்து, தினமும் 8 கிலோ சம்பங்கி பூ சாகுபடி செய்து அசத்தும் பெண் விவசாயி!
Share your comments