ABDM (ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்) கீழ், தனிநபர்கள் தங்கள் உடல்நலப் பதிவுகளை நிர்வகிக்க ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) ஐ உருவாக்கலாம். இது 14 இலக்க எண்களை கொண்டதாகும், இது தனிநபர்களை தனித்துவமாக அடையாளம் காணவும், அவர்களை அங்கீகரிப்பதற்காகவும், அவர்களின் உடல்நலப் பதிவுகளை இணைக்கவும் பயன்படுகிறது. இந்த அடையாள அட்டையை எவ்வாறு உருவாக்குவது, தெரிந்துக்கொள்ளலாம்.
ABHA அல்லது தேசிய சுகாதார அடையாள அட்டையை எவ்வாறு பெறுவது?
நீங்கள் ஏகா கேர் இணையதளம் அல்லது ஏகா கேர் ஆப்பை பயன்படுத்தி ABHA அல்லது ஹெல்த் ஐடி கார்டை உருவாக்கலாம். உங்களின் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் அல்லது தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி ABHA அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி ABHA அல்லது ஆரோக்கிய அடையாள அட்டையை உருவாக்கலாம்.
ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஏகா கேரில் ABHA அல்லது ஹெல்த் ஐடி கார்டை உருவாக்குவது எப்படி? தெரிந்துக்கொள்ளலாம்:
- ஏகா கேர் ஆப் அல்லது இணையதளத்தைத் திறந்து, ஹெல்த் ஐடியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்
- உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்கவும்
- ஹெல்த் ஐடியுடன் இணைக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்கவும்
- நீங்கள் விரும்பும் ABHA முகவரியை உள்ளிடவும் மற்றும் உங்கள் ABHA அல்லது சுகாதார அடையாள அட்டை உருவாக்கப்படும்.
மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஏகா கேரில் ABHA அல்லது ஹெல்த் ஐடி கார்டை உருவாக்குவது எப்படி?
- ஏகா கேர் ஆப் அல்லது இணையதளத்தைத் திறந்து, ஹெல்த் ஐடியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்
- உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்கவும்
- ஹெல்த் ஐடியுடன் இணைக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்கவும்
- நீங்கள் விரும்பும் ABHA முகவரியை உள்ளிடவும் மற்றும் உங்கள் ABHA அல்லது சுகாதார அடையாள அட்டை உருவாக்கப்படும்
ஆதாரைப் பயன்படுத்தி ஹெல்த் ஐடி இணையதளத்தில் ABHA அல்லது ஹெல்த் ஐடி கார்டை உருவாக்குவது எப்படி?
- https://healthid.ndhm.gov.in/ என்ற இணையத்தள சேவையை திறந்து உருவாக்கு ABHA என்பதைக் கிளிக் செய்யவும்
- ஆதாரைத் தேர்ந்தெடுத்து OTP மூலம் சரிபார்க்கவும்
- உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்கவும்
- நீங்கள் விரும்பும் ABHA முகவரியை உள்ளிடவும் மற்றும் உங்கள் ABHA அல்லது சுகாதார அடையாள அட்டை உருவாக்கப்படும்
ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி ABHA அல்லது ஆரோக்கிய அடையாள அட்டையை எவ்வாறு உருவாக்குவது?
- https://healthid.ndhm.gov.in/ இணையத்தளத்தை திறந்து உருவாக்கு ABHA என்பதைக் கிளிக் செய்யவும்
- ஓட்டுநர் உரிமத்துடன் உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்கவும்
- PHR முகவரியை உள்ளிடவும், நீங்கள் பதிவு எண்ணைப் பெறுவீர்கள்
- இந்தப் பதிவு எண்ணை அருகிலுள்ள NDHM பங்கேற்கும் வசதிக்கு எடுத்துச் சென்று உங்கள் ABHA அல்லது சுகாதார அடையாள அட்டையைப் பெறுங்கள்
மூன்று முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு என்னால் உள்நுழைய முடியவில்லையா?
கடவுச்சொல் மூலம் உங்கள் ABHA கணக்கிலிருந்து, நீங்கள் லாக் ஆகியிருக்கலாம், உள்நுழைவதற்கான மற்ற அங்கீகார முறைகளை, நீங்கள் முயற்சி செய்யலாம். ஒரே நேரத்தில் மூன்று முறை தவறான முயற்சிகளில், அங்கீகார முறை (மொபைல் OTP அல்லது கடவுச்சொல் அல்லது ஆதார் OTP) 12 மணிநேரத்திற்கு முடக்கப்படும். உள்நுழைய, மீதமுள்ள முறைகளைப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: மூன்று உள்நுழைவு முறைகளிலிருந்தும் லாக் அவுட் செய்யப்பட்டால், 12 மணிநேரத்திற்கு உங்களால் உள்நுழைய முடியாது.
எனது உடல்நலத் தகவலைப் பார்க்கக்கூடிய அனைத்து சுகாதார வழங்குநர்களும் அல்லது மருத்துவர்களும் யார்?
உங்கள் ஒப்புதல் மற்றும் தனியுரிமை NDHM இன் மையமாகும். உங்கள் உடல்நலத் தகவலைப் பார்க்க, பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதார வழங்குநர்கள், உங்கள் சம்மதத்தைப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் விரும்பும் கால அளவு மற்றும் உங்கள் பதிவுகளின் தெரிவுநிலைக்கு ஏற்ப பகிர்தல் அனுமதிகளைத் தனிப்பயனாக்கலாம் மற்றும் திருத்தலாம் என்பது குறிப்பிடதக்கது.
எனது ABHA அல்லது ஹெல்த் ஐடியை நான் நீக்க முடியுமா?
ஆம், இதுவும் சாத்தியம் உங்கள் ABHA அல்லது ஹெல்த் ஐடியை நிரந்தரமாக நீக்கலாம் அல்லது தற்காலிகமாக செயலிழக்கச் செய்யலாம். இது உங்களுக்குத் தேவைப்படும் டிஜிட்டல் ஹெல்த் சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து விலக உங்களை அனுமதிக்கின்றது.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ABHA அல்லது Health ID கிடைக்குமா?
ஆம், குழந்தைகளுக்கான ABHA அல்லது ஹெல்த் ஐடியை அதே செயல்முறை மூலம் உருவாக்கலாம், கூடுதலாக அவர்களின் வயதை சரியாக குறிப்பிட மறவாதீர்கள்.
மேலும் படிக்க:
PM Kisan: ரூ. 2000 இன்று உங்கள் கையில்: மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் கொள்முதல் நிறுத்தம்...
Share your comments