விவசாயிகளா நீங்கள்...? ஆம் எனில் கண்டிப்பாக இந்தந்த திட்டங்களில் இணைந்திருக்கவேண்டும். பயிர் நடவு முதல் கால்நடைகள் பராமரிப்பு வரை அனைத்திற்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் மானிய உதவிகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. கீழ் காணும் திட்டங்களில் நீங்கள் இணைந்திருக்கவிட்டால் இப்போதே இணைந்திடுங்கள்.
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana)
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளுக்கு அறிவித்துள்ள முக்கியமான திட்டங்களின் முதன்மையானதாக இந்த திட்டம் இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6,000 வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டத்தில் ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.
இந்த திட்டத்தில் இனைய விலக்கு அளிக்கப்பட்ட நபர்களான அரசு பென்ஷன் பெறுவோர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள், அரசியல்வாதி ஆகியவர்கள் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்கள் பெற www.pmkisan.gov.in/
கிசான் கிரெடிக் கார்டு திட்டம் - Kisan Credit Card scheme
கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் குறைந்த வட்டியில் விவசாயம் சார்ந்த தேவைகளுக்கு கடன் பெற முடியும், இதன் மூலம் விவசாயிகள் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் பெற எந்தவித அடமானமும் தேவையில்லை.
KCC- மூலம் விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடனை குறைந்த வட்டியில் பெற முடியும். முறையாக தவணை செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகளில் கிசான் அட்டை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை, தேவைப்படும் ஆவணங்கள் குறித்து அறிய இங்கே கிளிக் செய்யுங்ள்
பிரதமர் கிருஷி சிஞ்சாயி யோஜனா திட்டம் - Pradhan Mantri Krishi Sinchai Yojana (PMKSY)
பிரதமர் கிருஷி சின்சாயி யோஜனா திட்டமானது குறைந்த நீரில் அதிக விளைச்சல் (More Crop per Drop)என்ற சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பான் பாசன முறைகள் போன்ற நுண்ணிய நீர்ப்பாசன நுட்பங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் குறைந்தளவு தண்ணீரைப் பயன்படுத்தி அதிக மகசூலை விவசாயிகள் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு துணை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தோட்டக்கலை துறை சார்பில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது, இது தொடர்பான விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://pmksy.gov.in/
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana)
இது ஒரு பயிர் காப்பீட்டு திட்டம், எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், விவசாயிகளின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப (காரிஃப், ராபி) பயிர் காப்பீடு செய்துக்கொள்ள முடியும். விவரம் அறிய pmfby.gov.in/
பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் குறித்து முழு விவரங்ளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
பிரதமரின் மன் தன் யோஜனா திட்டம் (Pradhan Mantri Kisan Maandhan Yojana)
பிரதமரின் கிஸான் மன் தன் என்ற திட்டம் ஒரு விவசாயிகளுக்கான பென்ஷன் திட்டமாகும். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 18 வயதிற்கு ரூ.55 செலுத்த வேண்டும். பிரிமியம் தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு என வசதிக்கு ஏற்ப செலுத்தலாம். இதில் 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூ.3,000/- ஓய்வூதியம் பெறலாம்.
முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் விவரங்கள் பெற pmkmy.gov.in/
கால்நடை காப்பீடு திட்டம் - Livestock insurance scheme
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நோய்யுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் கால்நடைகள் மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு
வறுமை கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்போர்க்கு 70% மானியமும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்போர்க்கு 50% மானியமும் வழங்கப்படும். இரண்டரை வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம்.
முழு விவரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்
கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் - Pashu Kisan Credit Card Scheme
கால்நடை வளர்ப்போர், எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் குறைந்த வட்டியில் ரூ1.60 லட்சம் வரை கடனாக பெற, கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் உதவுகிறது. இந்த கடன் அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடன் வழங்கப்படுகிறது.
கடன் தொகையை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியினை மத்திய அரசு மானியமாகச் செலுத்தும். . இதன் மூலம் விவசாயிகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதமாகக் குறைகிறது. கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
விண்ணப்பிக்கும் முறை, தேவைப்படும் ஆவணங்கள் குறித்து அறிய இங்கே கிளிக் செய்யுங்ள்
மண்வள அட்டை திட்டம் - Soil health card scheme
மண்வளத்தைக் கண்காணிக்கவும், மேம்படுத்தவும் இந்த மண்வள அட்டை ஒரு கருவியாகப் பயன்படுகிறது. காலப்போக்கில் மண்வளத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதற்கான மேம்பாட்டு முறைகளையும் இந்த அட்டையில் பதிவு செய்து கொள்ளலாம். ஒரே நபர் இந்த அட்டையை தொடர்ந்து பூர்த்தி செய்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு மண் எந்த அளவுக்கு பயிர் உற்பத்தித் திறன் கொண்டது என்பதை இந்த அட்டையைக் கொண்டு அறிய முடியும்.
மண்வள அட்டை குறித்து மேலும் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்
Share your comments