பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு ஜூன் மாதத்திற்கு பிறகும் கொரோனா கால உதவித்தொகையாக மாதாந்திர தவணை ரூ .500 வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜன் தன் வங்கிக்கணக்கு (Jan Dhan Account)
வங்கிக்கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக்கணக்கை உருவாக்கும் வகையில் ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் (PM Jan Dhan account) தொடங்கப்பட்டது. இந்த பிரதமரின் ஜன்தன் கணக்கினை எந்த வங்கயில் வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம். இதற்கு எந்த கட்டாய இருப்பு தொகையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதில் இதுவரை 53 சதவீதம் வங்கிக்கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன.கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 59% வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
ஜூன் மாதத்திற்கு பிறகும் நிவாரண உதவி
இந்த ஜன் தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு, கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மாதம் அவர்களின் வங்கி கணக்கில் 500ரூபாய் மத்திய அரசு சார்பில் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது, அதன்படி முதல் தவணை கடந்த ஏப்ரல் மாதமும், இரண்டாவது தவணை மே மாதமும் பெண்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்தியது.
இதைத்தொடர்ந்து மூன்றாவது தவணையைச் செலுத்தும் பணிகளும் தற்போது துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த நிவாரண நிதி ஜூன் மாதத்திற்கு பிறகும் செலுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு இம்மாத இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
வங்கிக்கணக்கைத் தொடங்குவது எப்படி?
நீங்கள் ஜன் தன் வங்கி கணக்கைத் தொடங்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் பின்பற்றுங்கள்
-
பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா விண்ணப்பப் படிவத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தோ அல்லது ஏதாவதொரு வங்கி இணையதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
-
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அடையாள ஆவணம், முகவரிச் சான்று ஆகியவற்றை இணைத்து அதனோடு KYC விவரங்களை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
-
நீங்கள் ஜன் தன் கணக்கு திறக்க நினைக்கும் வங்கி கிளைக்கு இந்த ஆவணங்கள் மற்றும் கணக்கு திறப்பதற்கான விண்ணப்பத்தையும் எடுத்துச் செல்லவும்.
-
உங்கள் ஆவணங்களை முறையாகச் சரிபார்த்த பின்னர், உங்கள் வங்கிக் கணக்கு திறக்கப்படும்.
PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள்!!
விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள்
ஓட்டுநர் உரிமம்,
ஆதார் அட்டை,
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை,
கடவுச்சீட்டு (Passport)
நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card)
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை (மாநில அரசு அலுவலரால் கையொப்பம் இடப்பட்டது)
அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம்.
Related link
ஜன்தன் கணக்கு தகவல்கள் அறிவது எப்படி?
கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
Share your comments