ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருள் விற்பனைத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த, மானியத்துடன் கூடிய கடனுதவியை, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வழங்கி வருகிறது. இதுகுறித்து நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலத் தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் அறிவித்திருப்பதாவது:
'ஒருகிணைந்த வேளாண் விளைப்பொருள் விற்பனைத் திட்டத்தின் கீழ், சேமிப்புக் கட்டமைப்பு மற்றும் அதைச் சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்; விளைப்பொருள் விற்பனையில் போட்டி மற்றும் மாற்று வழிகளை உருவாக்குதல்: சிறியளவிலான அமைப்புகளை உருவாக்கி, உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவுதல்:
நுகர்வோர் பயனடையும் வகையில் சிறந்த கிராமியச் சந்தைகளை உருவாக்கி, தேசிய விவாதச் சந்தை இணையதளத்துடன் இணைத்து, இந்தச் சந்தைகள் மேம்பட ஊக்கமளித்தல; விளைபொருள்களின் தரம், தரப்படுத்தல் மற்றும் தரச்சான்றுக்கான கட்டமைப்புகளை வழங்கி, விவசாயிகளுக்கு உற்பத்தித் தரத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பை உறுதிப்படுத்துதல், எதிர்கால வணிகத்தை ஊக்கப்படுத்துதல் போன்றவை, இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும்.
FPO/FPC மூலம் பொதுமக்கள் வசதி மையத்தை ஊக்குவித்தல்:
பதிவு செய்யப்பட்ட FPO நிறுவனத்தின் குறைந்தளவு 50 உறுப்பினர்கள், இத்திட்டத்தின் கீழ் தகுதியுடயவர்கள். இதற்கான பொது வசதி மையத்தை அமைப்பதற்கான உட்கட்டமைப்பு வசதி, கணினி, தகவல் தொடர்பு வசதி, சேமிப்புக் கிடங்கு, குளிர் அறையில் ஆழமான குளிர்விப்பான், பழுக்க வைக்கும் சேம்பர், தகவல் பலகைகள், தானியத் துப்புரவாளர், குறிப்பிட்ட புவியீர்ப்புப் பிரிவான், சிறிய பருப்பாலை, எண்ணெயாலை, அரிசியாலை போன்றவற்றை உள்ளடக்கியது.
தமிழ்நாட்டில் மானியம் எவ்வளவு?
பதிவு செய்யப்பட்ட விவசாய உற்பத்தி நிறுவனங்கள், பஞ்சாயத்துகள், மகளிர், எஸ்.சி., எஸ்.ட்டி., தொழில் முனைவோர் அல்லது அவர்களின் சுய உதவிக் குழுக்கள், சேமிப்பு உட்கட்டமைப்புக்கான மொத்த மூலதனத்தில் 33.33% தொகையை மானியமாகப் பெறலாம். மற்ற அனைத்துப் பயனாளிகள் 25% தொகையை மானியமாகப் பெறலாம். சேமிப்புக் கிடங்கைத் தவிர, கிராமச் சந்தை போன்ற கிராம மேம்பாட்டுச் செய்யும் முதலீட்டில், 33.33% தொகையை முதல் பிரிவினரும், 25% தொகையை இரண்டாம் பிரிவினரும் மானியமாகக் பெற்றிடலாம்.
விண்ணப்பிக்கும் முறை இதோ:
முறையான திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன், மானியத்துடன் அடங்கிய காலக்கடனுக்காக நிதி நிறுவனத்தில் விண்ணப்பித்தல் வேண்டும். அது தவணைக்கடனை அனுமதிக்கும். கடனை வழங்கிய நிதி நிறுவனம் முதல் தவணையைக் கொடுத்த 60 நாளில் நபார்டுக்கு மானியத்துக்காக விண்ணப்பிக்கிறது. தகுதியான திட்டங்களுக்கு மானியத்தை வழங்கும். இத்திட்டம் முடிந்த பிறகு, கடனை வழங்கிய நிறுவனம் இறுதி மானியத்தைப் பெறவும், திட்டத்தை ஆய்வு செய்யவும் விண்ணப்பிக்கிறது. இந்த அடிப்படையில் அனுமதியை வழங்கும் நபார்டு, இறுதி மானியத்தை விடுவிக்கும். இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களைப் பெற, அருகிலிருக்கும் நபார்டு வங்கியை அணுகலாம் என்றார், தமிழ்நாடு மண்டலத் தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன்.
மேலும் படிக்க:
News Update: நாளை மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கான எச்சரிக்கை
Share your comments