தெளிப்புநீர் அல்லது மழைத்தூவான் அமைத்த விவசாயிகள் மீண்டும் மூன்று ஆண்டுகளில் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து, மேலும் தகவலுக்கு பதிவை தொடருங்கள்.
சேலம் மாவட்டத்தில், தெளிப்புநீர் அல்லது மழைத்தூவான் அமைத்த விவசாயிகள் மீண்டும் மூன்று ஆண்டுகளில் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தெளிப்புநீர் அல்லது மழைத்தூவான் அமைத்த விவசாயிகள் மீண்டும் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 7 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. மூன்று ஆண்டுகளில் பெறலாம் என அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தெரிவிக்கப்படுகிறது.
பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 2017-18 முதல் விவசாயிகள் தெளிப்புநீர் அல்லது மழைத்தூவான் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. முதல் முறை மானியத்தில் கருவிகள் பெற்றபின் அதே வயலுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மானியம் பெற முடியும். இதனை தற்போது 3 ஆண்டுகளாக அரசு குறைத்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள தெளிப்பு நீர்பாசன அமைப்பினை சொட்டுநீர் மாற்றுவதற்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in-ல் MIMIS என்ற வலையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:1.5% மட்டுமே செலுத்தி சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!
திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்:
நுண்ணீர் பாசன வகைகள்:
நுண்ணீர் பாசனத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் என இரண்டு முறைகள் உள்ளது. சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம்மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. அணுகவேண்டிய அலுவலர் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை / வேளாண் உதவி இயக்குநர் ஆவர்.
தேவைப்படும் ஆவணங்கள்:
- விவசாயி புகைப்படம்
- குடும்ப அட்டை நகல்
- சிட்டா நகல்
- அடங்கல் நகல்
- நில வரைப்படம்
- கிணறு ஆவணம்
- நீர் மற்றும் மண் பரிசோதனை ஆவணம்
- வட்டாட்சியர் அலுவலரால் வழங்கப்பட்ட சிறு/குறு விவசாயி சான்றிதழ்
- ஆதார் அட்டை நகல்
- குத்தகை நிலமாக இருப்பின் 7 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம்
- சொந்த கிணறு இல்லையெனில் அருகில் உள்ள உரிமையாளரிடமிருந்து தண்ணீர் பயன்படுத்த சம்மத கடிதம்.
எனவே, மேற்கண்ட பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் தெளிப்புநீர் அல்லது மழைத்தூவான் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை மூலம் செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும், பயன்பாட்டில் உள்ள தெளிப்பு நீர்பாசன அமைப்பினை சொட்டுநீர் மாற்றுவதற்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
Uzhavan App மூலம் பயிர் காப்பீடு செய்ய பயிர்கள் மற்றும் கட்டண விவரங்கள் அறிக | Agri News
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு PMFBY | Mushroom Farming | News
Share your comments