PM Kisan FPO Yojana : விவசாய குழுக்களுக்கு 15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா உங்களுக்கு?

Daisy Rose Mary
Daisy Rose Mary

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார உதவிகளை வழங்கும் நோக்கில் மத்திய அரசால் பிரதமர் கிசான் உழவர் உற்பத்தியாளர் யோஜனா (PM Kisan FPO Yojana) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

PM Kisan FPO Yojana

இந்த திட்டம் தனி ஒரு விவசாயிக்கு வழங்கப்படுவது கிடையாது. ஒரு விவசாய குழு, விவசாய கூட்டுறவு, அல்லது விவசாய அமைப்புகளுக்கு பல்வேறு வகையில் சலுகைகளும், கடனுதவி, மானிய உதவி போன்ற திட்டங்களை வழங்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனை பெற விவசாயிகள் குறைந்தது 11 பேர் இணைந்து சொந்தமாக ஒரு விவசாயம் தொடர்பான நிறுவனம் அல்லது அமைப்பு அமைத்திருக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் தங்களின் வணிகத்தை பெறுக்கி லாபம் ஈட்டுவதை ஊக்குவிக்கிறது.

PM கிசான் FPO திட்டம் 2020 விவரங்கள்

  • இது ஒரு மத்திய அரசு திட்டமாகும், அதாவது நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்.

  • விவசாய அமைப்பு வெற்றுப் பகுதியில் பணிபுரிந்தால், அவர்களுடன் சுமார் 300 விவசாயிகளை இணைத்துக்கொண்டு விவசாயப் பணியாற்ற வேண்டும்.

  • இந்த அமைப்பு மலைப்பாங்கான பகுதிகளில் செயல்பட்டு வந்தால், அந்த அமைப்பு சுமார் 100 விவசாயிகளை கொண்டிருக்க வேண்டும்.

  • மானியம் மற்றும் சலுகை விலையில் காலந்தோறும் தேவாயன உரங்கள், விதைகள், மருந்துகள் மற்றும் விவசாய உபகரணங்கள் போன்றவைகளை இந்த விவசாய அமைப்பு அல்லது குழுக்கள் மூலமாக வழங்கப்படும். அதனை விவசாயிகள் தேவைக்கேற்ப பிரித்துக்கொள்ள வேண்டும்.

  • 2024-ஆம் ஆண்டளவில், பி.எம். கிசான் எப்.பி.ஓ திட்டத்திற்கு சுமார் 6,865 கோடி ரூபாய் மத்திய அரசால் செலவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • இந்த திட்டத்தின் கீழ், ஒரு விவசாய குழுவுக்கு ரூ. 15 லட்சம் வரை கடனுதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் அந்த குழுவினர் திருப்பிச் செலுத்த வேண்டும்.

PM கிசான் FPO திட்டம் 2020 க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

PM Kisan FPO திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் உங்கள் பகுதிகளில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பைத் தொடர்பு கொண்டு, தங்களை இணைத்துக்கொள்ளலாம். அல்லது இணையதளம் வாயிலாகவும் இந்தத் திட்டத்தில், விவசாயிகள் இணையும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதற்கான முன்பதிவு ஆன்லைனில் இதுவரைத் தொடங்கவில்லை. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. அறிவிப்பு வெளியானதும், விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.

மேலும் படிக்க..

PM-KISAN Scheme: 7-வது தவணை விரைவில், ரூ.6,000 பெற யார் தகுதியற்றவர்கள்? விவரம் உள்ளே!!

வடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம்!!

தமிழக அரசின் மீன்கள் ஆப் மூலம் ரூ.1 கோடிக்கு மீன்கள் விற்பனை!!

English Summary: Now farmer producer organization can get financial assistance upto Rs 15 lakh through PM Kisan FPO Scheme Know more Detail Published on: 14 November 2020, 08:14 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.