PMJDY: வங்கிக்கணக்கில் பணம் இல்லாத போதும், ரூ.5 ஆயிரம் எடுக்க உதவும் ஜன் தன் அக்கவுன்ட்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிப்பவரா நீங்கள். அப்படியானால்,  5 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ள உங்களுக்கு உதவுகிறது  ஜன் தன் வங்கிக்கணக்கு.

ஜன் தன் வங்கிக்கணக்கு (Jan Dhan Account)

வங்கிக்கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக்கணக்கை உருவாக்கும் வகையில் மோடி அரசால், ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் ( Jan Dhan Account) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, ஏழரைகோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. இதில் இதுவரை 53 சதவீதம் வங்கிக்கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்னமும் இது ஒரு சேமிப்பு கணக்கு என்றே மக்கள் தவறுதலாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

உண்மையில் இது சேமிப்பு கணக்கு அல்ல. அடிப்படையில் சேமிப்பு கணக்கில் இந்த திட்டம் வந்தாலும், சேமிப்பு கணக்கில் இல்லாத சில சிறப்பு சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்

சிறப்பு காப்பீடு

இந்த வங்கிக்கணக்கு தாரர்கள் குறைந்த பட்ச இருப்புத் தொகையை வைத்திருக்கத் தேவையில்லை. மாதத்திற்கு 4 முறை பணம் எடுத்துக்கொள்ளும் வசதி (Withdrawal), ஏடிஎம் கார்டு (ATM Card) இவற்றுடன் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பீடும் வழங்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், கணக்கு தாரர், விபத்தில் சிக்கி மரணம் அடைய நேரிட்டால், 2 லட்சம் ரூபாய் வழங்க வகைசெய்யும் ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.

Jan djan account
Image credit by: ZEE news

ஓவர் டிராஃப்ட் 

இந்த திட்டத்தின்படி 5 ஆயிரம் ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் (Over Draft) எடுத்துக்கொள்ளலாம். அதாவது இந்த வங்கிக்கணக்கில், பணம் கையிருப்பு இல்லாத போதிலும் (Zero Balance) 5 ஆயிரம் ரூபாய் ஓவர் டிராஃப்ட் எடுத்துக்கொள்ளும் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிபந்தனை 

  • இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள உங்கள் ஜன் தன் வங்கிக்கணக்கு, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம்.

  • ஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தாலே போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

  • இந்த ஆறு மாதங்களில், வங்கிக்கணக்கில் பணம் கையிருப்பை பராமரித்திருக்க வேண்டியதும், பணப்பரிமாற்றம் செய்திருக்க வேண்டியதும் அவசியம்.

  • சாதாரணமாக வங்கிக்கணக்கு தொடங்கத் தேவைப்படும் ஆவணங்கள் (Documents) மட்டும் போதும். ஜன் தன் கணக்கு தொடங்க போதுமானது வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை.

Elavarase Sivakumar
Krishi jagran

மேலும் படிக்க..

ஆவண உத்தரவாதம் இன்றி ரூ.50,000 வரை வங்கிகடன் - மத்திய அரசின் புதிய சலுகை!

மத்திய அரசால் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் மானியங்களை தெரிந்துகொள்ள எளிய முறை அறிமுகம்!

இத்தனை பயன்கள் ஸ்கிப்பிங்கிலா? இது தெரியாமல் போச்சே!

English Summary: Now you can Withdraw 5000rs even if the Balance is Zero on Jan Dhan account Published on: 29 June 2020, 07:17 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.