PM-SYM-முதியோர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
PM-SYM-Rs.3000 per month scheme for the elderly - Central Government announcement

ஏழை மற்றும் முதியவர்களின் நலனை மனதில் கொண்டு மோடி அரசு மீண்டும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு மாதத்திற்கு ரூ.3000 வழங்கப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது.

ஓய்வூதியம் (Pension)

வயதான காலத்தில் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல், நம் பணத்தில் சாப்பிட வேண்டும் என்பது நம்மில் பலரது இலட்சியமாக இருக்கும். இதனைக் கருத்தில்கொண்டு, நாளும் உழைத்துவரும் மக்களின் நலனுக்காக மத்திய அரசு சில திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதில் ஓய்வூதியத்திட்டங்களும் அடங்கும். குறிப்பாக ஏழை மற்றும் முதியவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் (Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana) என்றத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

Rs.3,000

இதில் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 60 வயதானவுடன் மாதத்திற்கு ரூ.3000 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் யோஜனாவை (PM-SYM) மத்திய அரசு 2019ல் மத்திய அரசு துவக்கியது.

டிரைவர், எலெக்ட்ரீசியன், ஸ்வீப்பர் உள்ளிட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாதத்துக்கு ரூ.15,000க்கும் குறைவான வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம்.

44 லட்சம் பேர் (44 lakh people)

இந்த திட்டத்தின் கீழ், மார்ச் 4, 2021 க்குள் சுமார் 44.90 லட்சம் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் 18-40 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களது மாத வருமானம் ரூ 15,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

எவ்வளவு முதலீடு? (How much to invest?)

PM-SYM திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு ரூ .55 முதல் 200 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில், 18 வயதுடையவர்கள் மாதத்திற்கு ரூ .55 செலுத்த வேண்டும், 30 வயதில் உள்ளவர்கள் ரூ .100 செலுத்த வேண்டும், 40 வயது நிரம்பியவர்கள் மாதத்திற்கு 200 ரூபாய் செலுத்த வேண்டும்.

ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் (Rs 3,000 pension)

 ஒரு தொழிலாளி தனது 18 வயதில் PM-SYM திட்டத்தில் தன்னை பதிவு செய்திருந்தால், அவர் ஒரு வருடத்தில் 660 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டி இருக்கும். அந்த தொழிலாளி 60 வயதுக்குள் ரூ .27,720 முதலீடு செய்ய வேண்டி இருக்கும். தொழிலாளர்கள் 42 ஆண்டுகளுக்கு பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். 60 வயதானவுடன் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ .3,000 கிடைக்கும்.

இந்திய அரசின் (Indian Government) இந்த திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மூலம் செயல்படுத்தப்படுகின்றது. ஆகையால் LIC ஓய்வூதியத்தையும் அளிக்கும்.

பதிவு செய்வது எப்படி? (How to register?)

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்ய, தொழிலாளர்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புக் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பொது சேவை மையத்திற்கு (CSC Center) சென்று தங்கள் கணக்கைத் திறக்க வேண்டும். கணக்கைத் திறந்த பிறகு, தொழிலாளிக்கு ஷ்ரம் யோகி அட்டை வழங்கப்படும். இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற 1800-267-6888 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

இந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் ரூ.10 கோடி பரிசு! நம்ப முடிகிறதா?

PM-Kisan : 9 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் -ரு.2000 - பிரதமர் மோடி விடுவித்தார்!

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

English Summary: PM-SYM-Rs.3000 per month scheme for the elderly - Central Government announcement Published on: 15 March 2021, 10:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.