பிரதம மந்திரி வய வந்தனா திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

Deiva Bindhiya
Deiva Bindhiya

பிரதம மந்திரி வய வந்தனா திட்டம் என்பது மூத்த குடிமக்களுக்கு வயது முதிர்வு கால வருமானத்துக்கு உறுதி செய்யும் நலத்திட்டமாகும், மேலும் இதன் பலனானது, அனைத்து மூத்த குடிமக்களும், அனுபவிக்கலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திட்ட காலம்:

பிரதமர் வய வந்தனா திட்டத்தை (PMVVY) 2020 மார்ச் 31-க்கு பின்னரும் மேலும் மூன்றாண்டு காலத்துக்கு 2023 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. இதன் பயன், மற்றும் அம்சங்கள் குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கிய அம்சங்கள்:

  • முதலில், 2020-21-இல் ஆண்டுக்கு 7.40 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட வருவாய்க்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மறுநிர்ணயம் அறிவிப்பும் வெளியாகும்.
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட விகித்தின் கீழ், நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் உறுதியளிக்கப்பட்ட வட்டி விகித ஆண்டு மறு நிர்ணயம், புதிய திட்ட மதிப்பீட்டுக்கிணங்க 7.75 சதவீத உச்சவரம்புக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • எல்ஐசி-யால் உருவாக்கப்பட்ட சந்தை மதிப்பு (நிகரச்செலவு) வருவாய்க்கும், திட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட விகித வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு காரணமாக எழும் தொகைக்கான அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
  • புதிய பாலிசிகளுக்கு, திட்டத்தின் முதலாண்டுக்கான நிதியில் ஆண்டுக்கு 0.5 சதவீதம் மேலாண்மைச் செலவுக்கு வரம்பாக நிர்ணயிக்கப்படும். அதன் பின்னர், இரண்டாம் ஆண்டு முதல் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 0.3 சதவீதம் ஆக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
  • ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்தில் ஆண்டு வருவாய் விகிதத்தை மாற்றியமைப்பதை அனுமதிக்க நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குதல் போன்ற தீர்வுகள் நிறைவேற்றப்படும்.
  • திட்டத்தின் மற்ற அனைத்து விதிமுறைகளும் தொடர்ந்து அதேவிதமாக நீடிக்கும் என்பதும் குறிப்பிடதக்கது.
  • ஆண்டுக்கு ரூ.12,000 ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூ.1,56,658 ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், மாதம் குறைந்த பட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடு ரூ.1,62,162 ஆக மாற்றியமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.

ஆன்லைன் விண்ணப்பம்

  • எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்-
  • தயாரிப்புகள் என்பதைப் தொடர்ந்து ‘ஓய்வூதியத் திட்டங்கள்ட என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்பதைக் கிளிக் செய்யவும். ஆன்லைனில் வாங்கவும் தாவலைக் கிளிக் செய்யவும்.
  • தேவையான விவரங்களுடன் படிவத்தைச் சமர்பித்து, அணுகல் ஐடியைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரியில் ஐடியைப் பெறுவீர்கள். ஐடியை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது, உங்கள் தேவைக்கேற்ப திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்பிக்கவும்.
  • கிடைக்கக்கூடிய கட்டண விருப்பங்களைப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள் மற்றும் நிறுவனம் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞசல் முகவரிக்கு பாலிசி ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளும்.

எனவே, வீட்டியிலிருந்துக்கொண்டே, இந்த படிவத்தைப் பூர்த்தி செய்து, எதிர்காலத்திற்கு பயனடையுங்கள்.

மேலும் படிக்க:

ஆராய்ச்சி மண் வள அட்டை: இதனால் பலன் என்ன?

விவசாயம் குறித்து மொபைல் மூலம் அறிந்து கொள்ள சிறந்த APP-கள்

English Summary: PMVVY: Prime Minister Vaya Vandana Scheme: How to apply? Published on: 06 May 2022, 03:44 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.