PMJDY: பல்வேறு நன்மைகளுடன் ரூ. 2 லட்சம் காப்பீடு தரும் ஜன் தன் கணக்கு திட்டம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

வங்கிக் கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கும் வகையில் ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) கடந்த 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறுபவர்களும் வங்கி, வரவு, சேமிப்பு, வைப்பு, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான நிதி சேவைகளையும் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்

PMJDY கணக்கினை எந்த வங்கயில் வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம். இதற்கு எந்த கட்டாய இருப்பு தொகையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டத்தில் மூலம் இது வரை 42 கோடி பேர் வங்கிக் கணக்கை துவக்கியுள்ளனர்.

ஜன தன் யோஜனாவின் முக்கிய அம்சங்கள்

  • கணக்கு வைத்திருப்பவர்களுக்கு RuPay debit card வழங்கப்படுகிறது.

  • PMJDY கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு உள்ளது.

  • ஜன் தன் கணக்குகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

  • கணக்கைத் திறக்க ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போதுமானது, வேறு ஆவணங்கள் தேவையில்லை

  • முதல் முறையாக கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஜன தன் கணக்குடன் ஆயுள் காப்பீடு ரூ. 30,000 இணைக்கப்பட்டுள்ளது, கணக்கு வைத்திருப்பவரின் மறைவுக்கு பின்பு கணக்கு வைத்திருப்பவர் பரிந்துரைத்த நபருக்கு இந்த பணம் கிடைக்கும்.

ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் பரிவர்த்தனை
கணக்கு வைத்திருப்பவர் விபத்தில் இறந்தால், கணக்கு வைத்திருப்பவரின் நாமினி ரூ. 2 லட்சம் மற்றும் ரூ. 30,000 ஆயிரம் பெற முடியும். ஆனால் இதற்காக, கணக்கு வைத்திருப்பவர் விபத்து நடந்த நாளிலிருந்து 90 நாட்களுக்கு முன்பு கணக்கு அல்லது ருபே அட்டை மூலம் பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும். எனவே, ஜன தன் கணக்கு வைத்திருப்பவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பரிவர்த்தனை செய்ய வேண்டியது அவசியமானது.

இன்னும் ஒரு சிறப்பு அம்சம்

ஜன் தன் கணக்கு ஒரு சிறப்பு வசதியை அளிக்கிறது, கணக்கில் பணம் இல்லையென்றாலும் கணக்கு வைத்திருப்பவர் ரூ. 10,000 வரை தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும், கணக்கைத் திறந்து 6 மாதங்களுக்குப் பிறகு இந்த வசதி கிடைக்கிறது.

மேலும் படிக்க...

ஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்குவது எப்படி?

English Summary: Pradhan Mantri Jan Dhan Yojana Gives many benefits includes Insurance Cover of Rs. 2 Lakh Published on: 20 May 2021, 12:23 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.