3 லட்சம் மானியத்தில் சோலார் மின் இணைப்பு பெறுவது எப்படி?

Poonguzhali R
Poonguzhali R

வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் விதைகள், உரங்கள், வேளாண் உபகரணங்கள், பண்ணைக் குட்டை அமைத்தல் முதலான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்கின்றன. தற்பொழுது ஊரக வளர்ச்சித்துறையுடன் இணைந்து தரிசு நிலங்களைச் சீரமைத்து விவசாய நிலங்களாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் சோலார் மின் இணைப்பினை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது மத்திய, மாநில அரசுகள்.

ஒவ்வொரு விவசாயியும் வேளாண்மைத் துறையின் வாயிலாக அரசுகள் வழங்கும் மானியதினைச் சரிவர பயன்படுத்தி விவசாயத்தினைப் பெறுக்குவதில் கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். அந்த நிலையில் சோலார் மின் இணைப்புக்குச் சுமார் ரூ. 5 லட்சம் செலவாகும். அனத் ஐந்து லட்ச ரூபாயில் ரூ. 3 லட்சம் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ரு. 2 லட்சத்தினை வங்கியில் கடனாகவும் பெற்று சோலார் மின் இணைப்புகளை விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு அமைக்கலாம்.

தேவையான சான்றுகள்

புகைப்படம் 2
ஆதார் கார்டு
நிலத்தின் சிட்டா
நிலத்தின் பட்டா
நில வரைபடம்
நில அடங்கல்
கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ்
வாய்தா ரசீது

(குறிப்பு: சான்றுகளை நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.)

மேலும் படிக்க: விவசாயத்திற்கு 5 லட்சம் கடன் பெறலாம்! விவரம் உள்ளே!

செயல்முறை

  • இவற்றை டிவிசன் அலுவலகத்தில் கொண்டு சென்று பதிவு செய்ய வேண்டும்.
    விண்ணப்பதாரரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
  • அதன் பின் சான்றிதழகள், உதவி மின் பொறியாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • நிலத்தில் போர் இருந்தால் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமிருந்து NOC வாங்கிக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின் ரூ.118 கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும். இப்பொழுது ஒப்புகைச் சீட்டுக் கொடுக்கப்படும்.
  • அதன் பிறகு தோட்டக்கலை அலுவலகத்திலிருந்து தகவல்கள் வரும்.

மேலும் படிக்க: மாதம் ரூ. 5,000 போதும் 1 லட்சம் பென்சன் வாங்கலாம்!

விவசாயத்திற்கு என இலவச மின் இணைப்புப் பெற்ற விவசாய நிலங்களுக்கு இந்த சோலார் மின் இணைப்பு வழங்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க

டிராக்டர் லோன் எங்கு பெறுவது? எப்படி பெறுவது?

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?

English Summary: Solar Power Connection: How to get Rs 3 lakh Subcidy? Published on: 28 May 2022, 11:49 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.