தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், பதிவு செய்த விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவ, மானியம் போன்ற வகைகளில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழகத்தில்,
2022-23 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்காக, ரூ.150 கோடி ஒன்றிய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.41.67 கோடி நிதியில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்
இத்திட்டத்தில், தனிப்பட்ட விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும் வேளாண் இயந்திரங்கள் விநியோகம் செய்யப்படும். அதிகபட்சமாக
டிராக்டர்-க்கு |
ரூ.5 இலட்சம் |
மினி டிராக்டர்-க்கு |
ரூ.2.25 இலட்சம் |
பவர்டில்லர்-க்கு |
ரூ.85,000/- |
நெல் நடவு இயந்திரம் |
ரூ.5 இலட்சம் |
களையெடுக்கும் இயந்திரம் |
ரூ.63,000/- |
சுழல் கலப்பை-க்கு |
ரூ.44,800/- |
விதைப்புக் கருவி-க்கு |
ரூ.24,100/- |
நிலக்கடலை அறுவடை இயந்திரம் |
ரூ.75,000/- |
கொத்துக் கலப்பை-க்கு |
ரூ.50,000/- |
நெல் அறுவடை இயந்திரம் |
ரூ.11 இலட்சம் |
பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம் |
ரூ.2.50 இலட்சம் |
கரும்பு சோகையை துகளாக்கும் கருவி-க்கு |
ரூ.1.25 இலட்சம் |
தென்னை ஓலைகளை துகளாக்கும் கருவி-க்கு |
ரூ.63,000/- |
வைக்கோல் கட்டும் கருவி-க்கு |
ரூ.2.25 இலட்சம் |
கரும்பு சோகை உரிக்கும் கருவி-க்கு |
ரூ.75,000/- |
புதர் அகற்றும் கருவி-க்கு |
ரூ.30,000/- |
தட்டை வெட்டும் கருவி-க்கு |
ரூ.20,000/- |
மானியமாக வழங்கப்படும். முதற்கட்டமாக, 1615 வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்துடன், கூடுதலாக 20 சதவிகித மானியம் சேர்த்து மொத்தம் 70% மானியம் வழங்கப்படும். இதனால், இப்பிரிவினைச் சார்ந்த விவசாயிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகை வெகுவாக குறையும். இதற்கான மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும்.
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது http://aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
அ) ஆதார் அட்டையின் நகல்
ஆ) புகைப்படம் (Passport Size Photo)
இ) சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல்
ஈ) ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல்
கிராமங்களில் சாகுபடிப் பணிகளுக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காமல் அவதியுறும் வேளாண் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு மேற்கொண்டு வரும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
(குறிப்பு: இச்செய்தி மக்கள் தொடர்புத்துறையால் வெளியிடப்பட்டது.)
மேலும் படிக்க:
தமிழகம்: விவசாயிகளுக்கு மினி டிராக்டர் வாங்க மானியம் ரூ.75,000 வழங்கல்| மின் இணைப்பிற்கு முன்னுரிமை
PMFBY பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு! |100 யூனிட் இலவச மின்சாரம் Update!
Share your comments