2022 பட்ஜெட்டும் டிஜிட்டல் முறையில் தாக்கல், எவ்வாறு நடக்கும் இந்த பணி?

Deiva Bindhiya
Deiva Bindhiya
The 2022 budget will also be filed digitally

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு, கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இம்முறையும் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. நிதி அமைச்சகத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், 'பட்ஜெட் ஆவணங்கள் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் கிடைக்கும்' என்றனர்.

நாட்டின் பட்ஜெட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பிப்ரவரி 1 ஆம் தேதி, நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த முறையும் அரசு டிஜிட்டல் பட்ஜெட்டை முன்வைக்கும், அதில் சில இயற்பியல் பிரதிகள் மட்டுமே கிடைக்கும். பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், வரி பரிந்துரைகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான ஆவணங்களை அச்சிடுவதை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவைக் கருத்தில் கொண்டு, இந்த முறை பாரம்பரியமாக கொண்டாடி வந்த விழாக்களும் கைவிடப்பட்டன.

பட்ஜெட் எவ்வாறு அச்சிடப்படுகிறது? (How is the budget printed?)

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இம்முறையும் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. நிதி அமைச்சகத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் கூறுகையில், 'பட்ஜெட் ஆவணங்கள் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் வழங்க முடிவெடுத்திருப்பது' தெரியவந்தது.

ஒரு சில பிரதிகள் மட்டுமே இயற்பியல் ரீதியாக கிடைக்கும். பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்கும் பணி பல நூறு பிரதிகளில் நடந்து வருகிறது. இதன் காரணமாக, அச்சகத் தொழிலாளர்கள் சில வாரங்கள் நார்த் பிளாக்கின் அடித்தளத்தில் உள்ள அச்சகத்தில் தங்க வேண்டியிருந்தது. நிதியமைச்சக அலுவலகமும் நார்த் பிளாக்கிலே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

பாரம்பரியமாக கொண்டாடப்படும் விழா இருக்காது (There will be no traditionally celebrated ceremony)

பட்ஜெட்டுக்காக, ஊழியர்கள் குடும்பத்தை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டியிருக்கிறது, எனவே பட்ஜெட் ஆவணம் அச்சடிக்கும் பணி முடிவடைந்த பிறகு, பாரம்பரிய 'ஹல்வா விழா'வுடன் தொடங்கப்படுகிறது. இதில் அனைவரும் ஒன்று சேர்ந்து, இனிப்பு சாப்பிட்டு மகிழ்வது வழக்கமாகும். இம்முறை இந்த நிகழ்வு இருக்காது என்பது குறிப்பிடசக்கது.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பட்ஜெட் பிரதிகளை குறைத்தது (The Modi government decreased the budget copies after coming to power)

மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல், பட்ஜெட் பிரதிகளை அச்சடிக்கும் பணியை மேற்கொண்டதில் இருந்து, பத்திரிகையாளர்கள் மற்றும் வெளி ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் நகல்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறது. இதன்பின், கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி, லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி-க்களுக்கு வழங்கப்பட்ட நகல்களும் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

தமிழக ரேஷன் கார்டுதாரர்களே கவனம், அரசின் முக்கிய அறிவிப்பு

உர மானியம் 2022: பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, உர மானியத்தின் நிலவரம் என்ன?

English Summary: The 2022 budget will also be filed digitally, how it is be prepared? Published on: 27 January 2022, 10:19 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.