"விராசாட்-2" திட்டம்: 6% வட்டியில் கைவினைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி!

Deiva Bindhiya
Deiva Bindhiya

Virsat-2 scheme: Rs 10 lakh loan for artisans at 6% interest!

தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விராசட் - 2 (Credit Line - 2 Under Virsat) என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம், கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் பணி மூலதனம் (சந்தையில் உள்ள தேவைக்கேற்ப தயாரிப்புகளை உருவாக்குதல்) மற்றும் நிலையான மூலதனத் தேவைகள் (இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கருவிகள்) ஆகியவற்றைச் சந்திக்க உதவுவதாகும்.

இத்திட்டத்தில் பயன்பெற கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்:

1. சிறுபானம்மையினராக (இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இருத்தல் வேண்டும்.

2. 18-60 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

3. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

4. விராசட் - 1ல் பயன்பெறாத நபர்கள் ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமலும், கிராம மற்றும் நகர்புற பகுதிகளில் வசிக்கும் கைவினைஞர்கள் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி வீதத்திலும், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

5. விண்ணப்பதாரர் கோரும் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் (NMDFC) மூலம் 90 சதவீதம் கடன் தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) மூலம் 5 சதவீதம் கடன் தொகையும் மற்றும் விண்ணப்பதாரரின் பங்குத் தொகை 5 சதவீதம் சேர்த்து கடன் உதவித்தொகொ வழங்கப்படுகிறது.

6. கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.

அணுக வேண்டிய அலுவலர்:

  • இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்)
  • அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள்.
  • நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்
  • ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, அவர்கள் தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் வரம்பு ரூ. 10 லட்சம் பெறலாம்.

டேர்ம் லோன் திட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் வட்டியை விட 1% குறைவான வட்டி விகிதம் (NMDFC ஆல் வழங்கப்படுகிறது).

மேலும் பெண் கலைஞர்களுக்கு 1% கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பாரம்பரிய கைவினைகளை மேம்படுத்துவதற்காக ஹுனார் ஹாட் கண்காட்சிகளை NMDFC ஏற்பாடு செய்கிறது. இது கைவினைஞர்களுக்கு அவர்களின் கலைப்பொருட்களை விற்க/ஆர்டர் பெற ஒரு தளத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க:

விவசாயிகளே சீக்கிரமா பயிர் காப்பீடு செய்யுங்கள்: இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு!

விவசாயிகள் யூரியாவிற்கு மாற்றாக நானோ யூரியா பயன்படுத்த ஆலோசனை

English Summary: Virsat-2 scheme: Rs 10 lakh loan for artisans at 6% interest!

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.